JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஊக்க மருந்து பரிசோதனை!

ல்லிக்கட்டு காளைகளுக்கு கோகயின், நிகோடின் பரிசோதனை நடத்த வேண்டுமென இந்திய விலங்குகள் நலவாரியம் புதிய நெறிமுறை வகுத்துள்ளது. ஆனால், இந்த சோதனை நடத்துவது எப்படி என்பது குறித்து எங்களுக்க எதுவும் தெரியவில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, காளைகளுக்கு சாராயம் வழங்கப்பட்டிருக்கிறதா என்று மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. மூச்சு பரிசோதனையில் காளைகளுக்கு மது வழங்கப்பட்டிருந்தால் எளிதாக கண்டறிய முடியும். ஆனால், கோகயின், நிகோடின் போன்ற பரிசோதனைகள் நடத்துவது குறித்து இதுவரை கேள்விபட்டதில்லை என்று போட்டி அமைப்பாளர்கள் கையை பிசைகின்றனர். புதிய நெறிகாட்டுதல் முறையில் காளைகள், போட்டியில் பங்கேற்பவர்கள், காளை உரிமையாளர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் கண்டிப்பாக தனித்தனியாக இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.  

இந்திய விலங்குகள் நல வாரியத் தலைர் குப்தா, ''காளைகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும்  இன்சூரன்ஸ் கண்டிப்பாக எடுத்திருக்க வேண்டும். போட்டி நடைபெறும் இடங்களில் எங்கள் குழுவினர் சோதனையில் ஈடுபடுவார்கள்'' எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, காளைகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் என்று தனித்தனியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. காளைகளின் 4 புகைப்படங்களுடன் 500 ரூபாய் டி.டி எடுத்து கொடுக்க வேண்டும். கால்நடை மருத்துவரிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். காளை உரிமையாளரின் அடையாள அட்டை ஆகியவை போதுமானதாக இருந்தது.

Read 78 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…