JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

விஜய் சேதுபதி,கோபி நயினாருக்கு பெரியார் விருது

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அறம் பட இயக்குனர் கோபி நயினார் உள்பட 11 பேருக்கு பெரியார் விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஜனவரி 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை பெரியார் திடலில் நடக்கும் திராவிடர் திருநாள் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

வரும் 15ம் தேதி நடக்கும் விழாவில் விஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு விருது வழங்கப்பட உள்ளது. திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.  விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது கிடைத்துள்ளதை நினைத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உழைப்பால் உயர்ந்தவர் எங்கள் அண்ணன் என்று கூறி பெருமைப்படுகிறார்கள்.


Read 110 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…