JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

ஆண்டாள் இழிவு பேச்சு : ஸ்ரீவில்லிப்புத்தூரில் வைரமுத்து உருவபடம் எரிப்பு

ஆண்டாள் குறித்து விமர்சனம் செய்த வைரமுத்துவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வைரமுத்துவின் பேச்சை கண்டித்து நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மதுரையில் உள்ள தனது வீட்டில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆண்டாளை விமர்சித்தவர்களுக்கு இன்னும் என்னவெல்லாம் நேரும் என சொல்ல முடியாது. கண்ணகியால் மதுரை எரிந்தது போன்று, ஆண்டாள் பாசுரங்களை தவறாக பேசியவர்கள் எரிந்து போவார்கள். சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன் . எனது கணவரும் என்னுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதனிடையே, வைரமுத்துவின் பேச்சை கண்டித்தும், ஆண்டாள் கோயிலில் வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருகோஷ்டியூர் மாதவன் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் மாமுனிகள் ஜீயர் சுவாமிகள், தமிழ்நாடு பிராமண சங்க நிர்வாகிகள், விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் பலர் பேசினர்.

தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அப்போது, போலீசார்கேட்டு கொண்டதன் பேரில், வரும் புதன் வரை மன்னிப்பு கேட்க வைரமுத்துவுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இல்லையென்றால் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வைரமுத்து உருவப்படம் , அவரது பேச்சு வெளியிட்ட நாளிதழ் எரிக்கப்பட்டது.

Read 25 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…