JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

மாஞ்சோலை எஸ்டேட்: 99 ஆண்டு கால குத்தகை முடிவுக்கு வருகிறது

மாஞ்சோலை எஸ்டேட்டை வனப்பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக, புலிகள் காப்பக கள இயக்குனர் தெரிவித்தார்.கடந்த, 1929ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணைக்கு மேலே, 8,374 ஏக்கர் நிலத்தை, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் - பி.பி.டி.சி., என்ற நிறுவனம், அப்போதைய சிங்கம்பட்டி ஜமீன்தாரிடம், 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து, தேயிலை எஸ்டேட்கள் அமைத்தது.

விடுதலைக்கு பின், 1948ல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு, அவர்களது நிலங்களை அரசு கையகப்படுத்தியது. இருப்பினும் பழைய ஒப்பந்தத்தின் படி, 2028 வரை எஸ்டேட்டை நிர்வகிக்க, பி.பி.டி.சி., நிறுவனத்திற்கு அரசு அனுமதித்தது. அதன்பின், பி.பி.டி.சி., நிறுவனத்தினர், எஸ்டேட்டிற்கு பட்டா கேட்டு முறையிட்டனர். ஆனால், பட்டா வழங்க முடியாது என, வன நிர்ணய அலுவலர் நிராகரித்தார். Image result for manjolai estate images photos

இதை எதிர்த்து, தாக்கல் செய்த மனுவை, திருநெல்வேலி மாவட்ட கோர்ட் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவும், 2017 செப்டம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும், எஸ்டேட் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இது குறித்து, களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது: கடந்த, 40 ஆண்டுகளாக நீடித்த வழக்குகளுக்கு, தற்போது தீர்வு கிடைத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு துவங்கி முண்டந்துறை வரையிலான வனப்பகுதி, 1988 முதல் புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மாஞ்சோலை எஸ்டேட்டும், புலிகள் காப்பகத்திற்குள் வருவதால், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம். 2028 வரை குத்தகை அனுமதி இருந்தாலும் கூட, அந்த பகுதியை வனப் பகுதிகளாக மாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ரூ.223 கோடி பாக்கி : மேலும், அந்த நிறுவனம், 1 ஏக்கருக்கு ஆண்டுக்கு, ஒரு ரூபாய் 75 காசுகள் குத்தகை வீதம், மொத்த நிலம், 8,374 ஏக்கருக்கும் ஆண்டுக்கு, 14 ஆயிரத்து, 300 ரூபாய் மட்டுமே செலுத்தி வருகிறது.

சந்தை மதிப்பில், 12 சதவீத தொகையை குத்தகையாக தருமாறு கோரினோம். அதற்கும், 2005ல் தடை பெற்றனர். தற்போது, 223 கோடி ரூபாய் குத்தகை செலுத்த வேண்டியுள்ளது. இது உட்பட மேலும், மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தற்போது, மாஞ்சோலை எஸ்டேட்டில், 1,200 குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி, நடவடிக்கைகள் மேற்கொள்வோம். தேயிலை எஸ்டேட்டை, மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாக மாற்றுவதன் மூலம் கூடுதல் மழை பெய்வதுடன், புலிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு பாதுகாப்பாகவும் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Read 109 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…