JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

கூந்தன்குளம் : வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகரிப்பு

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கியுள்ளன. இருப்பினும் மணிமுத்தாறு அணை நீர் திறக்க பொதுப்பணித்துறையினர் லஞ்சம் கேட்பதால்தண்ணீர் தொடர்ந்துவருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளத்தில் பறவைகள் சரணாலயம் 1994ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்குள்ள குளத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் வரும் காலங்களில் செங்கால்நாரை, கூழைக்கடா, நத்தைகொத்திநாரை உள்ளிட்ட பறவைகள் வருகின்றன.அங்குள்ள கருவேல மரங்கள், முள்மரங்களில் பறவைகள் கூடுகள் கட்ட துவங்கியுள்ளன. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழையின்மையால் பறவைகள் வரவில்லை. ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகைக்கு சென்றுவிட்டன. இந்த ஆண்டு குளங்கள் நிரம்பியுள்ளதால் கூந்தங்குளம், காடன்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு பறவைகள் வரத்துவங்கியுள்ளன. சைபீரியா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் , செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கொக்குகள், கரண்டி வாயன் என நீர்ப் பறவைகள் வருகின்றன. 

வழக்கமாக ஜனவரி மாதத்தில் வரும் பறவைகள் ஆகஸ்ட் வரையிலும் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து குஞ்சுப்பறவைகளுடன் சொந்த தேசம் கிளம்புகின்றன. கூந்தங்குளம் பொதுமக்கள், பறவைகளுக்கு பாதுகாப்பாக உள்ளனர். யாரும் வேட்டையாடுவதி்லலை. தீபாவளியன்று கூட பட்டாசு வெடிப்பதில்லை.

இதனால் இந்த கிராமத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.பொ.ப.துறை லஞ்சம்:ஆண்டுதோறும் டிசம்பரில் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் மேலாக உயர்ந்தால் (மொத்த உயரம் 118 அடி) 80 அடி கால்வாய் மூலம், அணை நீிர்நாங்குநேரி கிராமங்ளுக்கு விவசாயத்திற்கு விடப்படும். 

தற்போது போதுமான அளவு தண்ணீர் இருந்தும்கூட, முதல் இரண்டு ரீச்களில் உள்ள சவுக்கு தோப்புகள், தனியார் எஸ்டேட் உரிமையாளர்களிடம் லஞ்சம்பெற்றுக்கொண்டு அங்கேயே தண்ணீர் வழங்குகின்றனர். இதனால் 3வது 4வது ரீச்களுக்கு தண்ணீர் இன்னமும் போதுமான அளவு கிடைக்கவில்லை. குறி்ப்பாக மணிமுத்தாறை நம்பி நெல் பயிர் நடவு செய்துள்ள விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். பறவைகள் சரணாலய குளத்திற்கு தண்ணீர் திறப்பதற்கே பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதற்கொண்டு, லஸ்கர் எனப்படும் கடைநிலை ஊழியர் வரையிலும் லஞ்சம் தரவேண்டியுள்ளது என விவசாயிகள் புலம்பினர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி முத்தையா கூறுகையில், சரணாலய குளத்திற்கு மணிமுத்தாறு தண்ணீர் விடவேண்டியது கட்டாயம். இதுகுறித்து பொதுப்பணித்துறையிடமும், கலெக்டர் சந்தீப்நந்துாரியிடமும் பேசிவருகிறோம் என்றார்.கணக்கெடுப்பு:நெல்லை மாவட்ட வனஅலுவலர் சம்பத் தலைமையில் பறவைகள் வருகை குறித்த கணக்கெடுப்பு நேற்று நடந்தது. கூந்தங்குளம், காடன்குளம், திருமலாபுரம், திருப்படைமருதுார் உள்ளிட்டகிராமங்களில் மாவட்ட வனத்துறையினர், கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து கணக்கெடுப்பினை நேற்று நடத்தினர். இன்றும் கணக்கெடுப்பு நடக்கிறது

Read 96 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…