JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

தக்காளி விலை மீண்டும் சரிவு : கிலோ  ரூ.4

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. கிலோ ரூ.4க்கு விற்பனையானது.கீழப்பாவூர் வட்டார பகுதியில், மகசூல் செய்யப்படும் தக்காளி பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவுகாலத்தில் ஓசூர், பெங்களூர் பகுதியில் இருந்து அதிகளவில் கொண்டு வரப்படும். இதனால் பல வாரங்களாக தக்காளி கிலோவுக்கு ரூ.10 முதல் 20 வரை விற்கப்பட்டது. 

தற்போது ஓசூர், ராயக்கோட்டை மற்றும் பெங்களூர் பகுதியில் தக்காளி மகசூல் முடிந்துவிட்டதால் தக்காளி விற்பனைக்கு வரவில்லை. இருப்பினும் சுரண்டை அருகேயுள்ள சாம்பவர்வடகரை அடுத்த கள்ளம்புளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்து தினமும் 5 டன் முதல் 10 டன் வரை தக்காளி விற்பனைக்கு வருகிறது.

வரத்து அதிகரித்து உள்ளதாலும், கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் குறைந்த அளவிலேயே கொள்முதல் செய்வதாலும், உள்ளூர் வியாபாரிகளும் தங்கள் தேவைக்கேற்ப குறைந்த அளவிலேயே தக்காளி வாங்குவதாலும் மார்க்கெட்டில் தக்காளி விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் கிலோ ரூ.4க்கு விற்பனையானது. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனர். 

Read 92 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…