JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

ஜிஎஸ்டி எதிரொலி :  நாச்சியார்கோயிலில்  குத்துவிளக்கு உற்பத்தி சரிவு

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கும்பகோணம் பகுதியில் குத்துவிளக்கு தயாரிப்பு தொழிலாளர்கள் வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோயில் பகுதியில் பித்தளை குத்துவிளக்கு தயாரிக்கும் பட்டறைகள் உள்ளது. இந்த பகுதியில் 300 பட்டறைகள் உள்ளன. இந்த தொழிலால் நேரடியாக 3,000 தொழிலாளர்கள், மறைமுகமாக 5,000 தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.

நாச்சியார்கோயிலில் தயாரிக்கப்படும் குத்துவிளக்குகள் ரூ.300 முதல் ரூ.3 லட்சம் வரை விற்கப்படுகிறது. 6 இன்ச் முதல் 6 அடி உயர குத்துவிளக்குகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் குத்துவிளக்குள், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

ேமலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2016ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்கத்தாலும், 2017ம் ஜூலை மாதம் மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரியாலும் குத்துவிளக்கு விற்பனை பாதியாக குறைந்துவிட்டது. 

பித்தளை குத்துவிளக்குகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. கடந்தாண்டு வரை தினந்தோறும் 10 லட்சம் மதிப்பிலான குத்துவிளக்குகள் விற்பனையானது. ஆனால் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரியால் தற்போது தினம்தோறும் 5 லட்சம் மதிப்பிலான குத்துவிளக்குகள் தான் விற்பனையாகிறது.

இதனால் உற்பத்தி குறைந்து தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான குத்துவிளக்கு தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் மாற்று வேலைக்கு சென்றுவிட்டனர். எனவே மத்திய, மாநில அரசுகள் குத்துவிளக்குக்கு 12 சதவீதம் உள்ள சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க வேண்டும். அப்போதுதான் குத்துவிளக்கு உற்பத்தி தொழிலை காப்பாற்ற முடியும் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read 73 times Last modified on சனிக்கிழமை, 10 பிப்ரவரி 2018 22:04
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…