JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம்

பஸ் கட்டணம் : முதல்வர் பழனிசாமி - ஸ்டாலின் சந்திப்பு

முதல்வர் பழனிசாமியை, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்து போக்குவரத்து கழகத்தை சீர் செய்வது குறித்த 27 பரிந்துரைகளை வழங்கினார்.

தமிழகத்தில் கடந்த மாதம் திடீரென பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு நடத்திட தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்ட குழு தனதுஅறிக்கையை ஸ்டாலினிடம் சமர்பித்தது. இதனை முதல்வர் பழனிசாமியிடம் ஒப்படைக்க திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேரம் கேட்கப்பட்டது.

நேரம் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று தலைமை செயலகத்தில் நண்பகல் 12 மணியளவில் முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் சந்தித்து, போக்குவரத்து கழகத்தை சீர் செய்வது குறித்த திமுகவின் அறிக்கையை வழங்கினார்.

 

Read 24 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…