JoomlaLock.com All4Share.net

Background Video

ஊட்டி தொட்டபெட்டா பகுதியில், அரிய வகை மினியேச்சர் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.நீலகிரி மாவட்டத்தில், 36 வகை குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. இவை, மூன்று ஆண்டுகள் முதல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை கொண்டவை.

பெரும்பாலான குறிஞ்சி மலர்கள், ஊதா நிறத்தில் காணப்படும்.இந்நிலையில், ஊட்டி தொட்டபெட்டா மலைச்சரிவுகளில், தற்போது, அரிய வகை, வெளிர் நிற, மினியேச்சர் குறிஞ்சி மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன.இவற்றை கண்டு, சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி அடைகின்றனர்.

தாவரவியல் ஆராய்ச்சியாளர், ராஜன் கூறியதாவது: மினியேச்சர் குறிஞ்சி பூக்கள் பார்க்க சிறிதாக இருந்தாலும், அழகாக இருக்கும்; அவற்றில் மருத்துவக் குணம் எதுவும் இல்லை. இந்த மலர்கள், மூன்று முதல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக் குறிஞ்சி மலர்கள், இவற்றை விட பெரிதாக இருக்கும்.தற்போது, தொட்டபெட்டா மலை அருகே பூத்துள்ள குறிஞ்சி, அரிய வகை மலர். இதை, 'ஸ்டாபிலாந்தஸ் ஒய்டியானஸ்' என, தாவரவியல் பெயரில் அழைப்பதுண்டு.

மூக்கூர்த்தி, கல்லட்டி மலைச்சரிவுகளில், சில இடங்களில் மட்டும் காண முடியும். தற்போது,தொட்டபெட்டா உட்பட சில இடங்களில், இந்த மலர்கள் பூத்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…