JoomlaLock.com All4Share.net

Background Video

ஞாயிற்றுக்கிழமை, 11 பிப்ரவரி 2018 00:00

பொள்ளாச்சி : அசத்திய கால்நடை திருவிழா

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சமத்துாரில், 'வானவராயர் பவுண்டேஷன்' சார்பில், 'கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழா' 9ம் தேதி துவங்கியது. விழாவின் இறுதி நாளான நேற்று, செம்மறி ஆட்டுக் கிடாய், குதிரைகள், எருமைக்கான போட்டிகள் நடந்தன.

அதில், 22 ஆட்டுக் கிடாய்கள்; சிப்பிபாறை, ராம்நாடு, ராஜபாளையம் ரகம் உள்ளிட்ட, 60 நாய்கள்; மார்வாரி, கத்தியவார் இனத்தைச் சேர்ந்த, 72 குதிரைகள்; 30க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றன. Image result for pollachi cattle festival photos images

முதலில், ஆட்டுக் கிடாய் அழகு போட்டி நடந்தது. அதில், ஆட்டு குணாதிசயங்கள், அதன் இனம், வளர்ப்பு முறை குறித்து கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து தேர்வு செய்தனர்.குதிரைகளின் உயரம், நீளம், வயது, பராமரிப்பு போன்றவை கணக்கிட்டு, தேர்வு நடந்தது.

இது போன்று, செம்மறி ஆட்டுக் கிடாய், எருமை, சேவல், நாய் ஆகியவற்றுக்கும் அழகு போட்டிகள் நடத்தப்பட்டன.கருப்பு, நொக்ரா - வெள்ளை, பஞ்ச கல்யாணி, குமைத், கருப்புச்சட்டை போன்ற பல்வேறு நிறமுடைய குதிரைகள், கொங்கு நாட்டு கால்நடைத் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்டன. பந்தய இடத்திற்கு அவை, வேகமாக புழுதி பறக்கச் சென்றதை பார்த்த பார்வையாளர்கள் வியந்தனர்.

இதுபோன்று, மார்வாரியைச் சேர்ந்த, 'லிங்கா' என்ற ஆண் குதிரை, 67 அங்குல உயரமுடையது. இந்த குதிரை, ராஜஸ்தானை பிறப்பிடமாக கொண்டது.உயரமான குதிரையை பார்வையாளர்கள் பார்த்து வியந்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

உழவுக்கு விழிப்புணர்வுகால்நடைத் திருவிழாவுக்கு, காளைகளை அழைத்து வந்து விவசாயிகள், அங்குள்ள காலியான நிலத்தில், ஏரில் மாடுகளை பூட்டி, உழவு செய்து காண்பித்தனர்.

மாடுகளின் ஆரோக்கியம், உழவுப் பணிக்கு நன்றாக உள்ளதா என்பதை காண்பிக்க, விவசாயிகள் உழவு ஓட்டி காண்பித்தனர். மேலும், பாரம்பரிய நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…