JoomlaLock.com All4Share.net

Background Video

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே வாகனச் சோதனையின் பைக்கை நிறுத்தாமல் வந்ததால் ஆவேசமடைந்து ஜீப்பில் விரட்டி சென்று இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்தில் வண்டி கவிழ்ந்து கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியானார். இதனால் ஆயிரக்கணக்கானோர் மறியலில் ஈடுபட 4 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). இவருடைய மனைவி உஷா (36). 10 வருடங்களாக குழந்தை இல்லாத உஷா கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். இந்நிலையில் ராஜா தனது மனைவியுடன் நேற்று இரவு தஞ்சையில் இருந்து பைக்கில் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.

துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

அவர் ராஜாவின் பைக்கை நிறுத்தும்படி கூறினார். ஆனால் ராஜா அதனை கவனிக்காமல் தொடர்ந்து ஓட்டிச்சென்றுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜீப்பில் ராஜாவின் பைக்கை விரட்டிச் சென்று, திருச்சி-தஞ்சை சாலையில் பாய்லர் ஆலை ரவுண்டானா மறித்து நிறுத்தினார்.

பின்னர் ராஜாவின் பைக்கை ஆவேசமாக எட்டி உதைத்துள்ளார். இதனால் நிலைதடுமாறி ராஜா, உஷாவுடன் சாலையில் விழுந்தார். இதில் 3 மாத கர்ப்பிணியான உஷாவின் கர்ப்பம் கலைந்து ரத்தம் வெளியேறி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.

பதற்றம் உருவானதை அடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் அங்கிருந்து ஜீப்பை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். ராஜாவை துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அப்பகுதி மக்கள் சேர்த்தனர். இத்தகவல் அறிந்து ஆயிரக்கணக்கானோர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு தாசில்தார், போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை.

இந்த சம்பவத்தால் திருச்சி-தஞ்சை சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே அந்த பகுதிக்கு வந்த போலீஸ் வாகனத்தின் மீது பொதுமக்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் இரவு 11 மணி அளவில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…