JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகத்தின் தேனி அருகே மலையேற்றத்தில் ஈடுபட்டவர்கள் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தங்கள் மாநில வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட கேரள அரசு தாற்காலிகத் தடை விதித்துள்ளது.

அந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எடுத்துள்ள இந்த முடிவை ஏற்று, கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாநிலத்தில் உள்ள வனப் பகுதிகளில் காட்டுத் தீயைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், வனப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுமாறும் வனத்துறை அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

'கேரள-தமிழக எல்லையை ஒட்டிய மலைப் பகுதியில்தான் காட்டுத் தீ பரவியுள்ளது. எனவே, காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கும் முழு உதவியை அளிக்குமாறு இடுக்கி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக் கண்காணிப்பாளருக்கு கேரள அரசு அறிவுறுத்தியது. 

இதையடுத்து, கேரள தீயணைப்புப் படையினர், போலீஸார் மற்றும் வனத் துறையினர் மீட்புப் பணிகளில் உதவி வருகின்றனர்' என்று கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…