JoomlaLock.com All4Share.net

Background Video

காற்றாலைகளில் இருந்து, திடீரென அதிக மின்சாரம் கிடைப்பதால், மின் வாரியம் நிம்மதி அடைந்துள்ளது. தமிழகத்தின், தினசரி மின் தேவை, சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது. மத்திய மின் தொகுப்பில் இருந்து, தமிழகத்திற்கு, 6,138 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டு இருந்தாலும், தினமும், 4,500 முதல், 5,000 மெகா வாட் அளவுக்கே வழங்கப்படுகிறது.

தற்போது, கோடை காலம் துவங்கியதால், தினசரி மின் தேவை, வழக்கத்தை விட அதிகம் உள்ளது.கூடங்குளம், வல்லுார் மின் நிலையங்களில், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதால், தமிழகத்திற்கு, மத்திய தொகுப்பில் இருந்து, குறைந்த மின்சாரமே கிடைக்கிறது.

இதனால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், மின் வாரியத்திற்கு, நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சில தினங்களுக்கு முன், நமது நாளிதழில், விரிவாக செய்தி வெளியானது. இந்நிலையில் தற்போது, காற்றாலைகளில் இருந்து, அதிகளவில் மின்சாரம் கிடைக்கிறது.

மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய தொகுப்பில் இருந்து, தற்போது, 3,000 - 4,000 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. இருப்பினும், தற்போது, சீசன் இல்லாத நிலையிலும், காற்றாலைகளில் இருந்து, 11ம் தேதி, 620 மெகா வாட்; 12ல், 890 மெகா வாட் என, தேவையான அளவுக்கு, மின்சாரம் கிடைக்கிறது. மத்திய மின் நிலையங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை, இதே நிலை தொடர்ந்தால், மின் தேவையை பூர்த்தி செய்வதில், எந்த பிரச்னையும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…