JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகம் - கர்நாடகா இடையே, காவிரி நதிநீரை பங்கிடுவது தொடர்பான வழக்கில், ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படலாம்' என, உச்ச நீதிமன்றம் சூசகமாக கூறியுள்ளது. Image result for cauvery water dispute images

தீர்ப்பாயம் அளித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து, இம்மாநிலங்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து உள்ளன. இம்மனுக்கள் மீதான தீர்ப்பை, மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்தாண்டு, செப்., 20ம் தேதி ஒத்தி வைத்தது.

இந்நிலையில், கர்நாடகா தலைநகர் பெங்களூரு, அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு, குடிநீர் சப்ளை செய்வது தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி, 2016ல், தொழிலதிபர், கிரண் மஜும்தார் ஷா தலைமையிலான குழு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுகூறியதாவது: 

தண்ணீர் தொடர்பான விவகாரத்தில், 20 ஆண்டு களாக, போதுமான அளவுக்கு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்படும்.

அதன் பின், பெங்களூரு நகருக்கு குடிநீர் சப்ளை தொடர்பான பிரச்னையை அணுகலாம்.இவ்வாறு அமர்வு கூறியது. இதன் மூலம், காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், ஒத்தி வைக்கப்பட்டுள்ள தீர்ப்பு, ஒரு மாதத்தில் அறிவிக்கப்படும் என கருதப்படுகிறது. 'ஒரு மாதத்தில் தீர்ப்பு அளிக்கப்படும்' என்பதையே நீதிபதிகள் சூசகமாக உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…