JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 06 பிப்ரவரி 2018 00:00

கீழடி அகழாய்வுக்கு ரூ.55 லட்சம் அனுமதி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப்பணிக்காக ரூ.55 லட்சம் அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மைச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் அண்மையில் வெளியிட்ட அரசு உத்தரவு: சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டம் கீழடி வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் பழைய வரலாற்றை வெளிப்படுத்தும் முக்கியப் பகுதி இது. இங்கு மத்திய தொல்லியல் துறை கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் 3 காலகட்டங்களாக விரிவான அகழாய்வு மேற்கொண்டுள்ளது.

பள்ளிசந்தை திடல் என்ற மேடான பகுதியில் நடந்த அகழாய்வுகளில் செங்கல் கட்டுமானம், உறைகிணறுகள், சுடுமண் பொம்மைகள், அரிய கல்மணிகள், யானை தந்தத்தினால் ஆன பொருட்கள், பழங்கால காசுகள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகள், பலவகை சுடுமண் பாத்திரங்கள் உள்பட பல தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. 

தமிழர்களின் கலை, சமூக, பொருளாதார மற்றும் கலாசார பிரதிபலிப்புகளாக அமைந்துள்ள அவற்றை மாநில தொல்லியல் துறை அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. எனவே அங்கு விரிவான அகழாய்வு செய்ய ரூ.55 லட்சம் ஒப்புதல் செய்யப்பட வேண்டும் என்று அரசுக்கு தொல்லியல் துறை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு அந்தத் தொகை ஒதுக்கப்படுகிறது.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…