JoomlaLock.com All4Share.net

Background Video

ஞாயிற்றுக்கிழமை, 11 பிப்ரவரி 2018 00:00

கேரளாவிற்கு கடத்தப்படும் தமிழக ரேஷன் அரிசி

தேனி மாவட்டம், போடிமெட்டு வழியாக கேரளாவிற்கு, தமிழக அரசு பஸ்களில், இலவச ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது.கேரளாவின் எல்லையோரம் உள்ள இடுக்கி மாவட்டத்திற்கு, தமிழகத்தில் இருந்து இலவச ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது.

கம்பம் மெட்டு, போடிமெட்டு வழித்தடங்களில் கூடுதலாக கடத்தப்படுகின்றன.டிரைவர் உதவிதனியார் வாகனங்களைக் காட்டிலும், தமிழக அரசு பஸ்களில், அதன் ஊழியர்களின் உதவியுடன் வெகு, 'ஜோராக' கடத்தல் நடக்கிறது. போடிமெட்டு வழியாக கடத்தும் அரிசி, நகர் பகுதி பஸ்களில் ஏற்றப்படுவதுஇல்லை.

5மூட்டைமுன் கூட்டியே ஆட்டோக்களில் கொண்டு வரப்பட்டு, வரும் வழியில் பஸ்களில் ஏற்றப்படுகிறது. அதற்கு டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வசதி செய்து கொடுக்கின்றனர்.தேனியில் இருந்து, நேற்று முன்தினம் காலை, 10:40 மணிக்கு புறப்பட்ட பஸ், முந்தல் அருகே வந்த போது, ஆட்டோவில் தயாராக இருந்த ஐந்து மூட்டை ரேஷன் அரிசி ஏற்றப்பட்டது. இதை, பெண் ஒருவர் கடத்தி வந்து, ராஜாக்காட்டில் இறக்கினார்.

அதற்கு ஏதுவாக டிரைவர் மற்றும் கண்டக்டர் செயல்பட்டதால், பஸ் சற்று தாமதமாக மூணாறு வந்து சேர்ந்தது. தேனியில் இருந்து வரும் போது, முந்தல் மற்றும் போடிமெட்டு பகுதிகளில், போலீஸ் சோதனைச் சாவடிகள் உள்ளன. அவை பெயரளவுக்கு மட்டும் செயல்படுவதால், எவ்வித பயனும் இல்லை.

நடவடிக்கைகுறிப்பாக, 'சில்லரை'க் காக தனியார் வாகனங்களை மட்டும் குறி வைப்பதால், அரசு பஸ்களை கண்டு கொள்வது இல்லை. ஆகவே,கடத்தல்காரர்களின் நோக்கம்எளிதில் நிறைவேறிவிடுகிறது.தேனி மாவட்ட நிர்வாகம், கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…