வெள்ளிக்கிழமை, 05 அக்டோபர் 2018 00:00
சிறப்பு கோர்ட்டில் ஆஜராக ஸ்டாலினுக்கு உத்தரவு
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தமிழக அரசை அவதூறாக பேசியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது 3 அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த ஐகோர்ட், எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு அடுத்த 2 வாரத்தில் ஒரு முறை ஸ்டாலின் ஆஜராக வேண்டும். அவர் ஆஜரான பின்னர், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கப்படும். ஐகோர்ட்டில் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடியும் வரை, சிறப்பு கோர்ட் தீர்ப்பு வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மழை வெள்ள முன் எச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட தொண்டர்கள் வேண்டும். மழை பாதிப்புகள் ஏற்பட்டால், நிர்வாகிகள் தொண்டர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Published in
தமிழகம்