JoomlaLock.com All4Share.net

Background Video

ஜெயலலிதா நினைவுநாளை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அதிமுகவினர் பேரணியாக வந்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அவர்கள் கறுப்பு சட்டையுடன் பேரணியாக வந்தனர். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, எம்.ஜி.ஆர்., நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.

 

ஜெயலலிதா சமாதியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சமாதி அருகே குவிந்துள்ளனர்.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…