JoomlaLock.com All4Share.net

Background Video

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே வெளியிட்ட அறிக்கை: 
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2009 முதல் 2014 வரை 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால், 2018 - 19ம் நிதியாண்டில் 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 190 சதவீதம் கூடுதல். 

ஒசூர் முதல் கர்நாடக மாநிலம் பையபனஹள்ளி வரையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு 376 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் தற்போது 3,198 கி.மீ., தூரத்திற்கு ரூ.20,064 கோடி மதிப்பிலான 27 திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…