JoomlaLock.com All4Share.net

Background Video

பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 7 நாட்களாக பஸ் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுமக்களின் நலனை கருதி பஸ்களை இன்றே இயக்க தொழிற்சங்கங்களுக்கு கோர்ட் அறிவுறுத்தியிருந்தது. 

இந்நிலையில் தொழிற்சங்கம் சார்பில் அரசு அறிவித்த 2.44 மடங்கு ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்க முடியாது, மேலும் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது : ‛‛ எங்கள் கோரிக்கையான 2.57 மடங்கு ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடைபெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இது குறித்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிடும் படி கோர்ட் கருத்து மட்டுமே தெரிவித்தது. எந்த வித உத்தரவும் வெளியிடவில்லை. '' என கூறினர்.

 

 

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…