JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018 00:00

பஸ் 'ஸ்டிரைக்' தற்காலிக வாபஸ்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னையில், மத்தியஸ்தம் செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதியை, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

அத்துடன், போராட்டத்தை கைவிட்டு, உடனே பணிக்கு திரும்பவும், நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியதால், தொழிற்சங்கங்கள் போராட்டத்தை, வாபஸ் பெற்றுள்ளன.

இந்நிலையில், தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், சென்னையில், நேற்றிரவு நடந்தது. இதில், போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவது என, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், எட்டு நாட்களாக முடங்கிய அரசு பஸ்கள், இன்று முதல் ஓடும். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்தோரும், நிம்மதி அடைந்துள்ளனர்.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…