JoomlaLock.com All4Share.net

Background Video

துரை, சிக்கந்தர் சாவடியில் நேற்று, போலீசாரை சுட முயன்ற இரண்டு ரவுடிகள், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் குற்றவாளிகளை களையெடுக்கும் நடவடிக்கையில், போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதனால், உயிர் பயத்தில், சரணடையும் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேட்டை,Madurai,மதுரை,என்கவுன்டர்,2 ரவுடிகள்,சுட்டுக்கொலை மதுரை, காமராஜர்புரத்தை சேர்ந்த ரவுடிகள் முத்திருளாண்டி என்ற மந்திரி, 30; 'சகுனி' கார்த்திக், 28. இருவரும் மாநகராட்சி, அ.தி.மு.க., கிழக்கு மண்டல முன்னாள் தலைவர், ராஜபாண்டியின் ஆதரவாளர்கள்.

ராஜபாண்டிக்கும், தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் குருசாமிக்கும் இடையேயான முன்விரோதம் காரணமாக, இருதரப்பிலும் தொடர் கொலைகள் நடந்து வருகின்றன. இதில், மந்திரி மற்றும் கார்த்திக் மீது, பல கொலை வழக்குகள் உள்ளன. இருவரும், 2015 முதல் தலைமறைவாக இருந்தனர். Related image

அலங்காநல்லுார் பகுதியில், இவர்கள் பதுங்கி இருப்பதாக, மதுரை மாநகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. செல்லுார் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படையினர் சென்ற போது, இருவரும் அங்கிருந்து தப்பினர். அலைபேசி 'டவர்' மூலம் கண்காணித்ததில், சிக்கந்தர் சாவடியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

அங்குள்ள மந்தையம்மன் கோவில் தெற்கு தெருவில், கூட்டாளி மாயக்கண்ணன், 25, என்பவர் வீட்டில் இருப்பதை அறிந்து, போலீசார் மாலை, 4:05 மணிக்கு அங்கு சென்றனர். தாழ்ப்பாள் போடாத இரும்பு கதவை திறந்து, உள்ளே சென்ற போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கார்த்திக், 'அண்ணே... போலீஸ்' என, சத்தம் போட, மந்திரி, தன் கைத்துப்பாக்கியால் சுட்டதில், போலீஸ்காரர் பாலமுருகன் என்பவருக்கு காயம் ஏற்பட்டது.

பாதுகாப்பு கருதி, எஸ்.ஐ., முருகன் சுட்டதில், தலையில் தோட்டா பாய்ந்து மந்திரி இறந்தான். ஆத்திரமுற்ற கார்த்திக், அந்த கைத்துப்பாக்கியை எடுத்து சுட முயன்ற போது, அவனை இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சுட்டதில், அவனும் தலையில் தோட்டா பாய்ந்து இறந்தான்.

இதை பயன்படுத்தி, அங்கிருந்த இரண்டு கூட்டாளிகள் தப்பி ஓட முயன்ற போது, மாயக்கண்ணன் மட்டும் பிடிபட்டான். அவனிடமும், வீட்டில் இருந்த மந்திரி மனைவியிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தை, எஸ்.பி., மணிவண்ணன், துணை கமிஷனர் சசிமோகன் ஆய்வு செய்தனர்.

மந்திரி, கீரைத்துறை போலீசிலும், கார்த்திக், தெப்பக்குளம் போலீசிலும், ரவுடி பட்டியலில் உள்ளனர். மந்திரி மீது, நான்கு கொலை, இரண்டு கொலை முயற்சி உட்பட மொத்தம், 11 வழக்குகள் உள்ளன. கார்த்திக் மீது, ஐந்து கொலை உட்பட, 19 வழக்குகள் உள்ளன.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…