JoomlaLock.com All4Share.net

Background Video

மீனாட்சி கோவில் வளாகத்திலுள்ள கடைகளை நாளை (பிப்.,8) காலை 11 மணிக்குள் காலி செய்யும்படி நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிப்.,2ல் ஏற்பட்ட தீ விபத்தில், 400 ஆண்டுகள் பழமையான வீரவசந்தராயர் மண்டபம் சிதலமடைந்தது. மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீயினால் கற்துாண்களில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் கோவில் வளாகத்திலுள்ள 115 கடைகளையும் நாளை (பிப்.,8) காலை 11 மணிக்குள் காலி செய்யும்படி கோவில் இணை ஆணையர் நடராஜர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நோட்டீஸ் குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடைக்காரர்கள் நலச்சங்க தலைவர் ராஜநாகலு விளக்கமளிக்கையில், கடைகளுக்கு மாற்று இடம் கொடுத்தபின் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கடைகளை உடனே அப்புறப்படுத்தினால் 500க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கோவில் வளாகத்தில் மாற்று மதத்தினர் கடைகள் வைக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…