JoomlaLock.com All4Share.net

Background Video

வைரமுத்துவை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தை, மக்கள் நலன் கருதி கைவிடுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவித்தார்.உண்ணாவிரதம் ராஜபாளையத்தில் நடந்த விழாவில், வைரமுத்து ஆண்டாளை அவதுாறாக பேசியதற்கு, பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்பிரச்னையில், அவர் ஆண்டாள் சன்னதியில் நேரில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டுமென, ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்.

அதிகாரிகள் வேண்டுகோளுக்கிணங்க, பிப்ரவரி 3 வரை, அவகாசம் கொடுத்து உண்ணாவிரதத்தை ஜீயர் தற்காலிகமாக ஒத்தி வைத்தார். நேற்று முன்தினம் வரை வைரமுத்து மன்னிப்பு கேட்காததால், நேற்று(பிப்.,8 ) காலை, 10:00 மணிக்கு மணவாளமாமுனிகள் சன்னதியில் பூஜைகளை முடித்து, திரளான பக்தர்களுடன் ஆண்டாளை தரிசனம் செய்து, மாடவீதிகள் சுற்றி வந்து, செருக்கூர் திருமண மண்டபத்தில் ஜீயர் உண்ணாவிரதத்தை துவக்கினார். இரண்டாவது நாளாக ஜீயரின் உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்ந்தது.

பக்தர்கள், பல்வேறு இந்து அமைப்பினர் பங்கேற்றனர். ஜீயரை, மன்னார்குடி ஜீயர் மற்றும் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆகியோர் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டு கொண்டனர்.மக்கள் நலன் கருதிஇதனை ஏற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரத போராட்டத்தை திரும்ப பெற்று கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: மடாதிபதிகள், ஜீயர்கள் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லதல்ல என மன்னார்குடி ஜீயர், ராஜா உள்ளிட்டோர் வலியுறுத்தினர். மக்கள் நலன் கருதி இந்த உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறேன்.

இனிமேல் உண்ணாவிரதம் இருக்க போவதில்லை. உண்ணாவிரதத்தை கைவிட எந்த அரசியல் நோக்கம் இல்லை. வைரமுத்து ஆண்டாள் சன்னதியில் வந்து மன்னிப்பு கேட்பது குறித்து பக்தர்கள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…