JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

2019 ம் ஆண்டு ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக சமீபத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த ஆலோசனையின் அடுத்த கட்டமாக இன்று, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…