ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம் செய்ய : தமிழக அரசு உத்தரவு..
சென்னை:
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 10 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு அளித்துள்ளது.
ஆனந்தராவ் விஷ்ணு பாட்டில் மின்னணு நிர்வாக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்னொசெண்ட திவ்யா கூட்டுறவுத்துறை துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ளா...
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக டி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக டி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த சந்திரமோகன் அதில் இருந்து விடுவிக்கப்பட்டு, வருவாய்த்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, பட்டு வளர்ப்புத்துறை மேலாண் இயக்குநர் சாந்தா தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஹரிகரன், தற்போது கோவை மாவட்ட ஆட்சியாளராக மாற்றப்பட்டுள்ளார். சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பொது மேலாளராக இருந்து வந்த பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து, தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வா வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்...
வேலூர் மாவட்ட ஆட்சியராக நந்தகோபால் நியமனம். சேலம் மாவட்ட ஆட்சியராக வி.சம்பத் நியமனம். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கணேஷ் நியமனம் நெல்லை மாவட்ட ஆட்சியராக கருணாகரன் நியமனம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியராக மதிவாணன் நியமனம். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக ஹரிஹரன் நியமனம். தேனி மாவட்ட ஆட்சியராக வெங்கடாச்சலம் நியமனம். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக ஞானசேகரனும் நியமனம். அனைவருக்குல் கல்வி திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக சமயமூர்த்தியும் நியமனம். தொல்லியல் துறை ஆணையரராக கார்த்திகேயன் நியமனம். போக்குவரத்துத் துறை ஆணையரராக சத்தியபிரபா சாகு நியமனம் அரசு இ சேவை மைய இயக்குனராக நாகராஜன் நியமனம். துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனராக வெங்கடேஷ் நியமனம்.டுபிட்ஃகோ நிறுவன மேலாண்மை இயக்குனராக சொர்ணா நியமனம். பூம்புகார் கப்பல் கழக மேலாண்மை இயக்குனராக ராஜேந்திர நியமனம். அரசு கேபிள் டிவி மேலாண் இயக்குனராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்...
சென்னை பெருநகர காவல் ஆணையராக டி.கே.ராஜேந்திரன் நியமனம். அமலாக்கப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அசுதோஷ் சுக்லா நியமனம். தமிழக சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக திரிபாதி நியமனம். கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு நியமனம். சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி.யாக கரண் சின்ஹா நியமனம். உளவுத்துறை ஐ.ஜி.யாக சத்தியமூர்த்தி நியமனம்.தருமபுரி மாவட்ட எஸ்.பி பண்டி கங்காதர், கிருஷ்ணகிரி மாவட்டத்தையும் கவனிப்பார்'' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.