JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 09 மே 2017 00:00

குப்பை லாரி மோதிய ஒருவர் உயிரிழப்பு!

சென்னை மயிலாப்பூரில் குப்பை ஏற்றிவந்த லாரி மோதியதில் கோவிந்தராஜ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Published in தமிழகம்

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் எனும் இடத்தில் மும்பை - அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள சாலை தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Published in இந்தியா

சென்னையில் நடந்த விபத்தில் கார் தீப்பிடித்ததில், கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.சென்னை ஆலப்பாக்கம் அஸ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் அஸ்வின்சுந்தர் , தேசிய கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் பெற்றவர் ஆவார். இவரும் அவரது மனைவி நிவேதிதாவும், சொந்த காரில் எம்.ஆர்.சி நகரில் இருந்து போரூர் ஆலப்பாக்கம் சென்று கொண்டிருந்தனர். பட்டினம்பாக்கம் அருகே சென்ற போது கார் திடீரென தீ பிடித்து எரிந்தது.அதில் காரில் இருந்து வெளியே வரமுடியாத நிலையில் இருவரும் சிக்கி கொண்டனர். காருக்குள்ளேயே இருவரும் எரிந்து பலியாயினர். பி.எம்.டபுள்யூ கார்: தகவல் அறிந்து வந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் , இருவரது உடலை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இருவரும் லீ மெரிடியன் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு காரில் வீடு திரும்பும் போது சம்பவம் நடந்துள்ளது.இவர்கள் சென்றது விலை மதிப்புமிக்க பி.எம்.டபுள்யூ கார் ஆகும். இந்த காரில் எப்படி தீ பிடித்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Published in தமிழகம்

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Published in அரசியல்

போதையில் ஓட்டி வந்த கார் மோதி தொழிலாளி பலி: சென்னை தொழிலதிபர் மகளின் ஜாமின் மனு தள்ளுபடி: ஐகோர்ட்

குடிபோதையில் ஓட்டிவந்த கார் மோதி கூலி தொழிலாளியின் இறப்புக்கு காரணமான ஐஸ்வர்யாவின் ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

சென்னை திருவான்மியூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2-ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் தரமணி ராஜீவ்காந்தி சாலையை கடந்து செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று முனுசாமி மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட முனுசாமி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தனது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்றார். பெருங்குடி அருகே அந்த காரை மடக்கிப்பிடித்தார். அப்போது காரில் 3 பெண்கள் மதுபோதையில் இருந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரில் இருந்த 3 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அதில், சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த தொழில் அதிபரின் மகளான ஐஸ்வர்யா (26) என்பவர் தனது தோழிகளுடன் வார விடுமுறையை கொண்டாட தனது சொகுசு காரில் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேரும் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக பணியாற்றி வருவதும் தெரிந்தது. இதுபற்றி கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து போதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யாவை கைது செய்தனர்.

கைதான ஐஸ்வர்யாவை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு மோகனா உத்தரவிட்டார்.

இந்நிலையில், தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என ஐஸ்வர்யாவின் சார்பில் அவரது வக்கீல் தாக்கல் செய்திருந்த மனுவை இன்று சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. விபத்து வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திவரும் நீதிமன்றத்தை அணுகாமல் ஐகோர்ட்டில் ஜாமினுக்காக மனு செய்துள்ளதை சுட்டிக்காட்டி அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யபடுவதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Published in தமிழகம்
பக்கம் 1 / 3
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…