JoomlaLock.com All4Share.net

Background Video

கரூர்: கரூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்புநாதன். இவர் கடந்த சட்டசபை தேர்தலின் போது விதிமுறைகளை மீறியதாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை முன்ஜாமின் வழங்கியது. கரூர் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டது. இதனையடுத்து அவர், கரூர் குற்றவியல் நீதிமன்றம்-1ல் ஆஜராகியுள்ளார். ஆனால் அவர் நீதிமன்றத்தின் உள்ளே செல்லாமல் வெளியே இருந்தார்.அப்போது அவரை செய்தியாளர்கள் படம் எடுக்க முயன்றனர். அங்கிருந்த அன்புநாதன் ஆதரவாளர்கள், செய்தியாளர்களைப் பார்த்து, ''படம் எடுக்காதீர்கள். அதை மீறி எடுத்தால், இங்கேயே உங்களை கொன்று விடுவோம்'' என மிரட்டினர்.

Published in தமிழகம்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள அப்பீல் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் உச்சநீதி மன்றத்தில் தொடங்குகிறது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து விட்டன. எனவே, அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு தேதியை நீதிபதிகள் அறிவிக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கீழ்நீதிமன்ற தண்டனையை உறுதி செய்ய வலியுறுத்தி கர்நாடகா மற்றும் திமுக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் பினாகி கோஷ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

முதலில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் தரப்பு வாதங்களும், பின்னர் கர்நாடக தரப்பில் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா வாதங்களும் முன் வைக்கப்பட்டன. மே 12ம் தேதி நடந்த விசாரணையின் போது, ஜூன் 1ம் தேதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அனைத்து தரப்பு வாதங்களும் முடிக்கப்பட்டு, வழக்கு விசாரணை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மீண்டும் நடைபெற உள்ள விசாரணையில் இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது. கடந்த ஜூன் 1-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா வாதிட்டார். அதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை சார்பில் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும் தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக வைத்தார்.

இந்த விசாரணையின்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம். மேலும், இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையதுதான் என்று நிரூபிக்க முடியுமா? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் கேட்டனர்.

இந்த சொத்தக் குவிப்பு வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அன்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், சிக்னோரா என்டர்பிரைசஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ் லிமிட்டெட், மிடோ அக்ரோ பார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனுக்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்கு எதிராக கர்நாடக அரசின் சார்பில் சித்தார்த் லூத்ரா ஆஜராகி வாதாடுவார் எனத் தெரிகிறது.

Published in தமிழகம்

பிஆர்பி நிறுவனத்தினர் மீது போலீசார் தொடர்ந்த 2 வழக்குகளின் விசாரணையை மேலூர் கோர்ட் ஒத்தி வைத்தது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு பகுதியில் செயல்பட்டு வந்த பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய்களை சேதப்படுத்தியதாக, போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மேலூர் கோர்ட்டில் போலீசாரால் 2 வழக்குகள் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மீது தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளின் விசாரணையை ஜூலை 7க்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Published in தமிழகம்

மேலூர்: கடந்த 2006ம ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தாசில்தார் காளிமுத்துவை, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி உள்ளிட்டவர்கள் தாக்கியது தொடர்பான வழக்கு இன்ற விசாரணைக்கு வந்தது. இதில் 6 பேர் மட்டுமே ஆஜரானார்கள். வழக்கின் வாய்தா அடுத்த மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வக்குமார் உத்தரவிட்டார்.

Published in அரசியல்
பக்கம் 3 / 3
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…