JoomlaLock.com All4Share.net

Background Video

தான் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் வெட்டவில்லை என சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியல் பட்டதாரியான சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கடந்த நிலையில் சந்தேகநபரான ராம்குமாரை பொலிஸார் கைது செய்தனர்.

தான்கைது செய்யப்பட போவதை அறிந்துகொண்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் தற்போது ராயப்பேட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவரும் ராம்குமாரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது நீதபதி முன்னிலையில் சாட்சியமளித்த ராம்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”சுவாதி என்னை தேவாங்கு என இழிவுபடுத்தியதால் ஒரு முறைதான் வெட்டினேன்.

அதுவும் கொலை செய்யும் முடிவில் சுவாதியை வெட்டவில்லை. வெட்டிய போது உடனே கத்தியை என்னால் இழுக்க முடியவில்லை.

சற்று சிரமப்பட்டு இரண்டு முறை இழுத்தேன். அதில்தான் சுவாதி உயிரிழந்திருக்கலாம். நான் தெரியாமல் செய்துவிட்டேன்.

என்னை விட்டுவிடுங்கள்’’ என நீதிபதி முன்னிலையில் கண்ணீர் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in தமிழகம்

சுவாதியின் வீட்டு அருகிலேயே கொலை யாளி இருந்திருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பெண் பொறியாளர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

செல்போன் சிக்னல்

சுவாதியை கொலை செய்த கொலைகாரன் அவரது செல்போனை யும் எடுத்துச் சென்றுவிட்டார். காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ‘ஆன்' செய்தே வைத்திருந்திருக்கிறார். பின்னர் அதை ‘சுவிட்ச் ஆப்' செய்திருக்கிறார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டபோது அவரது செல் போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதியின் வீடும் சூளைமேட்டில்தான் உள்ளது. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட இடமும் அவரது வீட்டு அருகில் உள்ள இடத்தையே காட்டுகிறது.

எனவே சுவாதியை கொலை செய்து விட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சுவாதியை கொலை செய்தவர் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சூளை மேட்டில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் கடந்த 4 நாட்களாக போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். சூளைமேட்டில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி என்று சந்தேகப் படும் நபரின் புகைப்படத்தையும் பொதுமக்களிடம் காட்டி விசாரணை நடத்துகின்றனர்.

பெங்களூர், மைசூர்

செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த சுவாதி, முன்னதாக மைசூரில் உள்ள நிறுவனத்தில் பயிற்சியும், பின்னர் பெங்களூரிலும் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னரே பரனூர் நிறுவனத்துக்கு வந்துள்ளார். கொலையாளி குறித்த தகவல்களை சேகரிக்க மைசூர், பெங்களூருக்கும் தனிப்படை சென்றுள்ளது. அங்கு சுவாதியுடன் பணிபுரிந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுவாதியை கொலை செய்த நபர் தப்பிச் செல்லும்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவரது படத்தை வரையும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சுவாதியை கொலை செய்த நபர் தப்பிச் செல்லும்போது, அவரை ஓர் இளைஞர் நேருக்கு நேர் பார்த்திருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை. கொலையாளி எப்படி இருப்பார் என்று அந்த இளைஞர் தகவல் தெரிவித்தால் படம் வரைய உதவியாக இருக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

Published in தமிழகம்

பிரேசிலில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, அந்த சிறுமியின் இதயத்தை பிடுங்கி எடுத்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரெயானா அபரேசிதா என்ற சிறுமி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது, அவளை பின்தொடர்ந்து சென்ற ஜெய்ரோ லோப்ஸ் (40), அவளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பிறகு, சிறுமியை கொன்றுவிட்டு, அவளது இதயத்தை வெட்டி எடுத்துவிட்டு, அவனது வீட்டின் பின்புறம் சிறுமியின் உடலை புதைத்துவிட்டான்.

சிறுமியைக் காணாத பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லோப்ஸை கைது செய்து விசாரித்ததில், நடந்த உண்மையை ஒப்புக் கொண்டான்.

இதையடுத்து, சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தபோது, உடலில் இதயம் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்த பொதுமக்கள் அவனைத் தாக்க முற்பட்டனர். உடனடியாக கொடூரக் குற்றவாளியை காவல்துறையினர் ஹெலிகாப்டர் மூலமாக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…