JoomlaLock.com All4Share.net

Background Video

பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூரைச் சேர்ந்த மோகன் என்பவர் நேற்று முன் தினம் வனப்பகுதியில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மர்மமான முறையில் இறந்து கிடந்த மோகனின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியாவிற்கும் மோகனிற்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு தீபிகா விஜயா என்று இரு மகள்கள் உள்ளனர். பிரியாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரைவிட 7 வயது குறைந்த ஆட்டோ டிரைவர் பிரபுவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதால் இதனை மோகன் கண்டித்துள்ளார். 

இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஜாலியாக இருப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொல்ல சதித் திட்டம் போட்டுள்ளார் பிரியா.

இருவரும் வேப்பந்தட்டை - வெண்பாவூர் இடையே உள்ள வனப்பகுதி அருகே சென்ற போது அங்கு மறைந்திரந்த பிரபு மோகனை வழிமறித்து தாக்கியுள்ளார். அப்போது உடனிருந்த மனைவி பிரியாவும் சேர்ந்து அரிவாளால் கழுத்து மற்றும் முகத்தில் மோகனை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

மோகன் உயிரிந்துவிட்டதை உறுதிசெய்த பிரியாவும் கள்ளக்காதலன் பிரபுவும் அந்த இடத்தை விட்டு தப்பியோடியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தக் கொலை குறித்து பிரபு மற்றும் பிரியாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published in தமிழகம்

கழுத்தில் வெட்டுக்காயம் இருந்த சயான் மனைவி  மகள் கொலை செய்யப்படவில்லை என திரிச்சூர் அரசு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த சயான் மனைவி வினுப்பிரியா  மகள் நீலு கழுத்தில் வெட்டுகாயம் இருந்ததால் கொலை செய்யப்பட்டார்களா என சந்தேகத்தின் அடிப்படையில் இருவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதனை அடுத்து இருவரின் உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Published in தமிழகம்

மதுரையில் வசித்து வருபவர் டவர் சரவணன். இவர் 2014ஆம் ஆண்டு  செய்த கொலைக்காக சிறை சென்றுள்ளார். இந்நிலையில் அவர் ஜாமீனில் இன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

 

அப்போது அலங்காநத்தம் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்களால் நடுரோட்டில் அரிவளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த சம்பவம் பலரது முன்னிலையில் பட்டப்பகலில் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தமிழகத்தில் நிலையான ஆட்சியும் அரசு இயந்திரங்கள் சரியாக இயங்காமலும் இருக்கின்றன.

இதனால் பலகொலைச் சம்பவங்கள் மிக சர்வ சாதரணமாக பட்டப்பகலில் பலரது கண் முன்னேயே நடக்கிறது. ஆனால் இதையெல்லாம் ஒடுக்க வேண்டிய காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

 

Published in தமிழகம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றொரு காவலாளி கிஷண்பகதூர் என்பவர் படுகாயங்களுடன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இந்தக் கொலை ஏன் நடைபெற்றது? எதற்காக நடைபெற்றது? இதில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரிக்க டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

பொலேரோ காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று காவலாளியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  கொடாநாடு அருகில் கோத்தகிரி அருகில் குப்பைத் தொட்டி ஒன்றில் போலி நம்பர் பிளேட் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கையுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை கொடநாடு பங்களா காவலாளியை கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டவையா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கொலையாளிகள் அனைவரும் முகமூடி அணிந்திருந்ததால், அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்  அவர்கள் அனைவரும் ஊட்டி வழியாக பெங்களூருக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Published in தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் இடையை நடந்த தகராறில் தந்தை குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரி மாணவர்களின் மோதலை விலக்கிய நரேஷ் என்ற மாணவனின் தந்தை கோவிந்தராஜ் உயிரிழந்தார். 

Published in தமிழகம்
பக்கம் 1 / 5
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…