JoomlaLock.com All4Share.net

Background Video

சுவாதி கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறி, ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் , ராம்குமார் மனுதாக்கல் செய்துள்ளான்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்ச்சித்த போது அவனை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில், ராம்குமார் இன்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது, ராம்குமார் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன் சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

மேலும் இது பற்றி ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. போலீசாருடன் வந்த நபர்கள் தான். ராம்குமார் கழுத்தை அறுத்தது என்று எங்களுக்கு வந்த தகவலின்

படி ராம்குமாருக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பில்லை. கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published in தமிழகம்

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கி.கே ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது சுவாதி கொலைக்குற்றவாளி ராம்குமாரை கைது செய்தது எப்படி என்பது பற்றி அவர் விளக்கம் அளித்தார்.

Published in தமிழகம்

இளம்பெண் சுவாதி கொலை சம்பவம் தொடர்பாக தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன், குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் தனது பேட்டியில், சுவாதி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் பலரிடம் இருந்தும் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.சாப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த வாரம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை ரயில் நிலையங்களில் 82 இடங்களில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…