JoomlaLock.com All4Share.net

Background Video

தான் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் வெட்டவில்லை என சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியல் பட்டதாரியான சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கடந்த நிலையில் சந்தேகநபரான ராம்குமாரை பொலிஸார் கைது செய்தனர்.

தான்கைது செய்யப்பட போவதை அறிந்துகொண்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் தற்போது ராயப்பேட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவரும் ராம்குமாரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது நீதபதி முன்னிலையில் சாட்சியமளித்த ராம்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”சுவாதி என்னை தேவாங்கு என இழிவுபடுத்தியதால் ஒரு முறைதான் வெட்டினேன்.

அதுவும் கொலை செய்யும் முடிவில் சுவாதியை வெட்டவில்லை. வெட்டிய போது உடனே கத்தியை என்னால் இழுக்க முடியவில்லை.

சற்று சிரமப்பட்டு இரண்டு முறை இழுத்தேன். அதில்தான் சுவாதி உயிரிழந்திருக்கலாம். நான் தெரியாமல் செய்துவிட்டேன்.

என்னை விட்டுவிடுங்கள்’’ என நீதிபதி முன்னிலையில் கண்ணீர் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in தமிழகம்
திங்கட்கிழமை, 04 ஜூலை 2016 00:00

ராம்குமார் நலமுடன் உள்ளார்

சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராம்குமார் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ராம்குமாரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ராம்குமார் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், ராம்குமார் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார். பேசகூடிய நிலையில் அவர் தேறி வருகின்றார் என்று மருத்துமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.

Published in தமிழகம்

மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட 9ம் நாளில் அவருக்கு 9ம் நாள் காரியம் செய்வதற்காக இன்று ஸ்ரீரங்கம் வந்தனர் சுவாதியின் உறவினர். சுவாதியின் தந்தையும் உறவினர்களும் ஆட்டோவில் வந்து இறங்கிய போது, செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். பேட்டியை தவிர்த்தனர். போட்டோ எடுக்க முற்பட்டபோது, சுவாதியின் தந்தை முகத்தை மூடிக்கொண்டே ஆட்டோவில் இருந்து இறங்கினார். போட்டோ எடுத்தவர்களை பார்த்து ஆவேசமாக பேசிக்கொண்டே அடிக்கப்பாய்ந்தார்.

Published in தமிழகம்
 
 
 
கொலையாளி ராம்குமார் தங்கியிருந்த மேன்சன் ஏ.எஸ்.மேன்சன் சூளைமேடு சவுராஷ்டிரா நகரில் உள்ளது. இங்கிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் தான் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் உள்ளது.இந்த மேன்சனில் தரைதளம் மற்றும் 2 மாடிகள் இருக்கின்றன. இதில் 70 அறைகள் உள்ளன. மாத வாடகைக்கு அறைகள் கொடுக்கப்படுகிறது.
இந்த மேன்சனில் 2-வது தளத்தில் உள்ள 404-வது அறையில் ராம்குமார் தங்கி இருந்தான்.

இந்த மேன்சனில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் வெவ்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள்.

சுவாதி கொலையில் துப்பு துலங்க காரணமாக இருந்தவர் மேன்சன் காவலாளி கோபால். போலீசார் கடந்த ஒரு வாரமாக கொலையாளியின் படத்தை சூளைமேடு பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் காட்டி விசாரித்தனர்.தங்கும் விடுதிகளிலும் அவனது புகைப்படத்தை ஒட்டி அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். ராம்குமார் தங்கியிருந்த மேன்சனிலும் அவனது புகைப்படத்தை ஒட்டியுள்ளனர்.

இந்த படத்தை பார்த்த மேன்சன் காவலாளி கோபாலுக்கு அதே மேன்சனில் தங்கியிருந்த ராம்குமாரே கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளி ராம்குமார்தானா என்பதை உறுதி செய்ய மேன்சனில் உள்ள ஆதாரங்களையும் திரட்டினர்.

அந்த மேன்சனில் 5 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. அதில் பதிவான காட்சிகளை போட்டோவாக எடுத்து ஆய்வு செய் தனர். அவர் தங்கியிருந்த 404&ம் எண் கொண்ட அறையில் சோதனை நடத்தப்பட்டது. ராம்குமாருடன் 50 வயதுள்ள மேலும் ஒருவரும் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. அவர் யார் என்றும் போலீசார் விசாரித்தனர்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் ராம்குமார் இந்த மேன் சனில் வந்து தங்கியுள்ளார்.

அந்த அறையில் சிக்கிய ஆதாரங்கள் மற்றும் காவலாளி தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ராம்குமார்தான் சுவாதியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே கண்காணிப்பு கேமராவில் பதிவான படமும், மேன்சனில் இருந்த ராம்குமாரின் படமும் ஒத்துப்போனது.
இதையடுத்து ராம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

 

Published in தமிழகம்

கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ராம்குமார் (24) நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியை அடுத்த மீனாட்சிபுரம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் பரமசிவம். தென்காசியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து முடித்துள்ளார்.

சென்னை சூளைமேட்டில் கடந்த 3 மாதங்களாக மேன்ஷன் ஒன்றில் ரூ.1500-க்கு வாடகைக்கு தங்கி வந்துள்ளார். இவர் சுவாதியை ஒரு தலையாக காதலித்து உள்ளார். இதற்கு சுவாதி சம்மதிக்காததால் ராம்குமார் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். சுவாதியை கொன்று விட்டு தனது சொந்த ஊருக்கு சென்று ராம்குமார் தலைமறைவாக இருந்துள்ளார். போலீசார் விசாரணையில் ராம்குமார் அவரது சொந்த ஊரில் மறைந்து இருக்கும் தகவல் அறிந்தது. இதையடுத்து, நேற்றிரவு மீனாட்சிபுரத்தில் உள்ள ராம்குமாரின் வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அவர்கள் ராம்குமாரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது அவர் தனது கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். போலீசார் அவரை காப்பாற்றி செங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். சுவாதி கொலை தொடர்பாக ராம்குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி ஆணையர் தேவராஜன் தலைமையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கழுத்தறுப்பட்ட ராம்குமாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர், ஓரிரு நாளில் இயல்பாக பேசுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Published in தமிழகம்
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…