JoomlaLock.com All4Share.net

Background Video

தமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் 40 நாட்களுக்கு பின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் திட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கடந்த மே 23ம் தேதி கையெழுத்து போட்டார். இத்திட்ட செலவாக ரூ.5,780 கோடி அறிவிக்கப்பட்டது.கூட்டுறவு வங்கிகளில் ஏற்பட்டுள்ள நிர்வாக குளறுபடி காரணமாக பல்வேறு மாவட்ட கடன்தாரர்கள் பட்டியலை துல்லியமாக சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பல இடங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகள், தங்களை கவனித்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதனால் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்த முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில், 40 நாட்களுக்கு பின் தற்போது விவசாய கடன் தள்ளுபடி திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்ற கடன் தள்ளுபடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் அடுத்த சில நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு பயனாளிகள் பட்டியல் வெளியிடுப்படுவது வழக்கம். ஆனால் சிறு, குறு விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் மிகவும் தாமதமாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பட்டியலை இறுதி செய்யவதில் தொடர்ந்து குளறுபடி நீடிப்பதால் இந்த நடைமுறை அமலுக்கு வர தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…