JoomlaLock.com All4Share.net

Background Video

சுவாதி கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறி, ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் , ராம்குமார் மனுதாக்கல் செய்துள்ளான்.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்ச்சித்த போது அவனை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில், ராம்குமார் இன்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது, ராம்குமார் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன் சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

மேலும் இது பற்றி ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. போலீசாருடன் வந்த நபர்கள் தான். ராம்குமார் கழுத்தை அறுத்தது என்று எங்களுக்கு வந்த தகவலின்

படி ராம்குமாருக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பில்லை. கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published in தமிழகம்
 
 
 
கொலையாளி ராம்குமார் தங்கியிருந்த மேன்சன் ஏ.எஸ்.மேன்சன் சூளைமேடு சவுராஷ்டிரா நகரில் உள்ளது. இங்கிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் தான் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் உள்ளது.இந்த மேன்சனில் தரைதளம் மற்றும் 2 மாடிகள் இருக்கின்றன. இதில் 70 அறைகள் உள்ளன. மாத வாடகைக்கு அறைகள் கொடுக்கப்படுகிறது.
இந்த மேன்சனில் 2-வது தளத்தில் உள்ள 404-வது அறையில் ராம்குமார் தங்கி இருந்தான்.

இந்த மேன்சனில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் வெவ்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள்.

சுவாதி கொலையில் துப்பு துலங்க காரணமாக இருந்தவர் மேன்சன் காவலாளி கோபால். போலீசார் கடந்த ஒரு வாரமாக கொலையாளியின் படத்தை சூளைமேடு பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களிடம் காட்டி விசாரித்தனர்.தங்கும் விடுதிகளிலும் அவனது புகைப்படத்தை ஒட்டி அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். ராம்குமார் தங்கியிருந்த மேன்சனிலும் அவனது புகைப்படத்தை ஒட்டியுள்ளனர்.

இந்த படத்தை பார்த்த மேன்சன் காவலாளி கோபாலுக்கு அதே மேன்சனில் தங்கியிருந்த ராம்குமாரே கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளி ராம்குமார்தானா என்பதை உறுதி செய்ய மேன்சனில் உள்ள ஆதாரங்களையும் திரட்டினர்.

அந்த மேன்சனில் 5 சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளன. அதில் பதிவான காட்சிகளை போட்டோவாக எடுத்து ஆய்வு செய் தனர். அவர் தங்கியிருந்த 404&ம் எண் கொண்ட அறையில் சோதனை நடத்தப்பட்டது. ராம்குமாருடன் 50 வயதுள்ள மேலும் ஒருவரும் தங்கி இருந்ததும் தெரிய வந்தது. அவர் யார் என்றும் போலீசார் விசாரித்தனர்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் ராம்குமார் இந்த மேன் சனில் வந்து தங்கியுள்ளார்.

அந்த அறையில் சிக்கிய ஆதாரங்கள் மற்றும் காவலாளி தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் ராம்குமார்தான் சுவாதியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே கண்காணிப்பு கேமராவில் பதிவான படமும், மேன்சனில் இருந்த ராம்குமாரின் படமும் ஒத்துப்போனது.
இதையடுத்து ராம்குமாரை போலீசார் கைது செய்தனர்.

 

Published in தமிழகம்

சென்னை ஐ.டி. நிறுவன ஊழியர் ஸ்வாதி கொலையில் தொடர்புடையவர்களை விரைவில் கண்டுபிடிக்காவிட்டால் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அமர்வு உத்தரவின் பேரில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜரானார். அவரிடம் 3 நாட்கள் ஆகியும் ஸ்வாதி கொலை குற்றவாளியை கண்டுபிடிக்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சுவாதி கொலை வழக்கில் ரயில்வே துறை கண்காணிப்பாளரும், சென்னை காவல் ஆணையரும் இணைந்து செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். அப்படி இல்லாவிட்டால் தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று இந்த வழக்கை நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இதனிடையே ஸ்வாதி கொலை வழக்கில் கிடைத்திருக்கும் தடயங்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக ரயில்வே எஸ்.பி.ஆனி விஜயா கூறியுள்ளார்.

Published in தமிழகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…