JoomlaLock.com All4Share.net

Background Video

தான் கொலை செய்ய வேண்டும் என்ற முடிவில் வெட்டவில்லை என சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம் 24ம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து பொறியியல் பட்டதாரியான சுவாதி படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் இடம்பெற்று ஒரு வாரம் கடந்த நிலையில் சந்தேகநபரான ராம்குமாரை பொலிஸார் கைது செய்தனர்.

தான்கைது செய்யப்பட போவதை அறிந்துகொண்ட ராம்குமார் தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் தற்போது ராயப்பேட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவரும் ராம்குமாரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது நீதபதி முன்னிலையில் சாட்சியமளித்த ராம்குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ”சுவாதி என்னை தேவாங்கு என இழிவுபடுத்தியதால் ஒரு முறைதான் வெட்டினேன்.

அதுவும் கொலை செய்யும் முடிவில் சுவாதியை வெட்டவில்லை. வெட்டிய போது உடனே கத்தியை என்னால் இழுக்க முடியவில்லை.

சற்று சிரமப்பட்டு இரண்டு முறை இழுத்தேன். அதில்தான் சுவாதி உயிரிழந்திருக்கலாம். நான் தெரியாமல் செய்துவிட்டேன்.

என்னை விட்டுவிடுங்கள்’’ என நீதிபதி முன்னிலையில் கண்ணீர் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in தமிழகம்
திங்கட்கிழமை, 04 ஜூலை 2016 00:00

ராம்குமார் நலமுடன் உள்ளார்

சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ராம்குமார் சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ராம்குமாரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். ராம்குமார் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், ராம்குமார் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார். பேசகூடிய நிலையில் அவர் தேறி வருகின்றார் என்று மருத்துமனை டீன் தகவல் தெரிவித்துள்ளார்.

Published in தமிழகம்

மென் பொறியாளர் சுவாதி  கொலை செய்யபட்ட வழக்கில் கொலை குற்றவாளிக்கு உடந்தையாக யாரும் இல்லை என சென்னை மாநகர ஆணையர் செய்தியாளர்களிடம் கூறினார். 

கடந்த வெள்ளி கிழமை காலை 6.30 மணியளவில் சுவாதி என்னும் இளம் பெண் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம் குமார் என்னும் இளைஞரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை குறித்து துப்பு துலங்கமால் போலீசார் திணறி வந்தனர், இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் மூலம் நெல்லையில் நேற்று ராம் குமார் என்னும் பொறியியல் படித்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

கடந்த வெள்ளி கிழமை சுவாதியை கொலை செய்த ராம் குமார் சென்னையிலிருந்து தப்பித்து அவருடைய சொந்த ஊருக்குச் சென்றார். சுவாதி கொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து பல்வேறு வதந்திகளும் பரவின.

அதில் சுவாதியை கொலை செய்தது கூலிப்படையை சேர்ந்த நபராக இருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர் சுவாதியை கொலை செய்தது தனி நபர் தான் என்றும், கொலை குற்றவாளியான ராம் குமாருக்கு உடந்தையாக யாரும் இல்லை எனவும் கூறினார். 

ஆனால் கொலை குற்றவாளியான ராம் குமார் தலைமறைவான நாள் முதல் ராம் குமாரின் நண்பரும் தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published in தமிழகம்

பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சந்தேக நபர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை ரயில்வே போலீஸார் விசாரித்ததில் முன்னேற்றம் ஏற்படாததால், விசாரணை சென்னை காவல்துறைக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டது. தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்றது. இதில், சுவாதியின் குடும்பத்தினர், தோழிகள், நண்பர்கள் ஆகியோரிடம் முதல் கட்ட விசாரணையை முடித்தனர். சில முக்கியத் தகவல்கள் போலீஸாருக்கு கிடைத்தன.

இதற்கு அடுத்ததாக சுவாதி செல்லும் வழியில் வீடுகள், தனியார் நிறுவனங்கள் பொருத்தியிருக்கும் 20 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். இதில், 5 கண்காணிப்பு கேமராவில் சுவாதியை கொலை செய்ததாக கருதப்படும் சந்தேக நபர் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதுதொடர்பாக சுமார் 300 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சுவாதியை ஒரு மாதமாக மர்ம நபர் பின் தொடர்ந்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சூளைமேடு பகுதியில் சந்தேக நபரின் புகைப்படத்தை காட்டி வீடு, வீடாகச் சென்று விசாரணை செய்தனர்.

இந்த நிலையில், சூளைமேட்டில் ஒரு மேன்சனில் பல மாதங்களாக தங்கியிருந்த திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்பவர்தான் சுவாதியை பின் தொடர்ந்து சென்றவர் என்பது தெரியவந்தது. இவர்தான் சந்தேக நபர் என தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் விசாரணை செய்ய செங்கோட்டைக்கு போலீஸார் வெள்ளிக்கிழமை சென்றனர். அதை தெரிந்துக் கொண்ட ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாராம்.

இதைப் பார்த்த போலீஸார், கழுத்தில் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

விசாரணையில் ராம்குமார் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பி.இ.படித்திருப்பதும், வேலை தேடி சென்னை வந்தவர் தனியார் மேன்சனில் தங்கியிருந்து, 3 மாதங்களாக ஒரு தலையாக சுவாதியை காதலித்து வந்ததும் தெரியவந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தை கதி கலங்கச் செய்த இந்தச் சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Published in தமிழகம்

சுவாதியின் ஃபேஸ்புக்கை முடக்கி, சுவாதியை கொலை செய்த மர்ம நபர் குறித்து பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை மக்களை அதிரச் செய்த இந்தச் சம்பவத்தில், கொலை செய்யப்பட்ட சுவாதி, முகநூலில் இருந்து வந்தார்.

அவர் கொலை செய்யப்பட்ட பின்னர், சுவாதியின் முகநூல் பக்கத்தில் பலர் அஞ்சலி செலுத்தினர். சிலர், முகநூலில் சுவாதி வைத்திருந்த புகைப்படத்தை எடுத்து இதர சமூக ஊடகங்களில் மறு பிரசுரம் செய்து, பலதரப்பட்ட கருத்துகளை பதிவு செய்தனர். இதனால், தேவையற்ற விவாதங்களும், பிரச்னைகளும் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், போலீஸாரின் விசாரணையும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால், சுவாதியின் முகநூல் பக்கத்தை முடக்கி உள்ள போலீஸார், வாட்ஸ் அப் மூலம் கொலையாளி சிக்குவானா என்று வலைவிரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும், தப்பியோடிய கொலையாளி, சுவாதியின் செல்போனையும் எடுத்து சென்றிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஒருவேளை அந்த செல்போனை குற்றவாளிதான் எடுத்து சென்று விட்டானா? அல்லது கொலைகாரனிடம் இருந்து தப்பிக்க நடத்திய போராட்டத்தில் செல்போன் கீழே விழுந்ததில் அதை பயணிகள் யாராவது எடுத்து சென்று விட்டார்களா? என்ற சந்தேகமும் புதிதாக எழுந்துள்ளது.

Published in தமிழகம்
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…