JoomlaLock.com All4Share.net

Background Video

Super User

Super User

Email: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் சேர்த்தது.
 
அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா கோலியின் சதம் மற்றும் ரகானேயின் அரை சதத்தால் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
 
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரிஸ் அவுட்டானார். அடுத்து இறங்கிய உஸ்மான் கவாஜா நிதானமாக ஆடினார்.
 
மறுபுறம் ஷான் மார்ஷ் 5 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 19 ரன்னுடனும் அவுட்டாகினர். ஆரோன் பிஞ்ச் காயமடைந்து ரிடயர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
 
இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கவாஜா 41 ரன்னிடன் களத்தில் உள்ளார்.
 
இந்தியா சார்பில் மொகமது ஷமி 2 விக்கெட்டும், பும்ரா, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்கள் முடிந்துள்ளன.
 
இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் 8 - 1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் வெண்கலம் வென்றது. இந்நிலையில், உலககோப்பையை வெல்லப் போகும் அணிக்கான போட்டியில் நெதர்லாந்தும், பெல்ஜியமும் மோதின.
 
இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதின. இதனால் முதல் பாதி மட்டுமின்றி ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
 
இதையடுத்து, இந்த தொடரில் இரண்டாவது முறையாக பெனால்டி ஷுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் பெல்ஜியம் அணி என்ற 3 - 2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி உலககோப்பையை வென்றது.
 
உலககோப்பை இறுதிப்போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்குடன் சேர்ந்து அமர்ந்து கண்டுகளித்தார். 

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று  நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில்  தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானைச்சேர்ந்த உலகின் 7 ஆம் நிலை வீராங்கனையான நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய வீராங்கனை பிவி சிந்து, 21-19, 21-17 என்ற கணக்கில் நஜோமி ஒகுஹராவை  வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

ஞாயிற்றுக்கிழமை, 16 டிசம்பர் 2018 00:00

எகிப்தில் மிகப் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்து தேசத்திற்கு பல ஆராய்ச்சியாளர்கள் அணிவகுத்து செல்கின்றனர். தோண்டத்தோண்ட சுரங்கத்தில் தங்கம் கிடைப்பதைப் போல இங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும்  பிரமிடுகளில் கல்லறைகளும், மம்மிகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.
 
மர்மங்கள் நிறைந்த எகிப்தில் வரலாறு ஆராய்வாளர்களுக்கு உள்ள ஆர்வம் எப்போதும் குறையாது என்பது  தற்போது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
 
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் கெய்ரொவில் உள்ள ஒரு பிரமிடில் பதப்படுத்தி வைக்கப்பட்ட புகழ்பெற்ற மதகுருவின் கல்லறையை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.
 
இதன் மூலம் அக்காலத்தில் நிலவிய கலாச்சாரத்தையும், வேறு சிலரைப் பற்றிய விவரங்களும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என தெரிகிறது.

மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலையை, அக்கட்சியின் தலைமை அலுவலகமான, சென்னை, அறிவாலயத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, நேற்று திறந்து வைத்தார். பின், மெரினா கடற்கரை சென்று, கருணாநிதி நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, சென்னை, அறிவாலயத்தில், 9 அடி உயரத்தில், முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த சிலை திறப்பு விழா, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தலைமையில், நடந்தது. சிலையை, காங்., மூத்த தலைவர், சோனியா திறந்து வைத்தார்.

விழாவில், காங்., தலைவர் ராகுல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் ராஜா, மாநில செயலர் முத்தரசன், வி.சி.,தலைவர் திருமாவளவன் பங்கேற்றனர். மேலும், தி.மு.க.,எம்.பி., கனிமொழி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், நடிகர்கள் ரஜினி, சத்ருகன் சின்ஹா, பிரபு, வடிவேல், அருள்நிதி, விவேக், நாசர், நடிகை குஷ்பு உட்பட, பலர் பங்கேற்றனர்.

சிலை திறப்பு விழா முடிந்ததும், சோனியா, ராகுல், சந்திரபாபுஆகியோர், மெரினா கடற்கரைக்கு சென்றனர். அங்கு, அண்ணா துரை, கருணாநிதி நினை விடங்களில்,மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். சோனியா, ராகுல் வருகையை யொட்டி, சென்னை மெரினா மட்டு மின்றி, சென்னை முழுவதும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காங்., மூத்த தலைவர் சோனியா, தற்போதைய தலைவர்ராகுல் ஆகியோர், மாலை, 4:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து, ஒரே காரில் அறிவாலயம் வந்தனர். வழி நெடுகிலும் அவர்களுக்கு, காங்., கட்சியினர், மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.

 தி.மு.க., சார்பில் கனிமொழி, காங்., சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர்களான முகுல் வாஸ்னிக், சிதம்பரம், தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர். * பொதுக்கூட்டம் நடந்த, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், அறிவாலயம் வடிவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. அறிவாலயத்தில் நடந்த சிலை திறப்பு விழாவை, அங்கிருந்தோர் காண வசதியாக, 10 எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

 பொதுக் கூட்டத்தில், கருணாநிதியின் புகழ் பரப்பும் வகையில், 'சூரியன் மறைவதில்லை' என்ற நுால் வெளியிடப்பட்டது.நுாலை, சோனியா வெளியிட்டார். பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற சோனியா உள்ளிட்ட தலைவர் களுக்கு, வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது.

பக்கம் 1 / 2290
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…