JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

அயோத்தி ராமர் கோயில் : ஒரு புதிய பார்வை

அயோத்தியில் கட்டப்பட்டிருந்த ஸ்ரீராமர் கோயில், மொகலாய மன்னரான பாபரின் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்படவில்லை; ஒளரங்கசீப் ஆட்சியில்தான் இடிக்கப்பட்டது என ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான கிஷோர் குணால் தாம் எழுதியுள்ள நூலில் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தக் கூற்று, அயோத்தி நகரின் வரலாறு குறித்த பொதுமக்களின் நம்பிக்கைக்கும், பல வரலாற்று அறிஞர்களின் கருத்துகளுக்கும் நேர்மாறாக அமைந்துள்ளது.

கடந்த 1972ஆம் ஆண்டைய குஜராத் மாநிலப் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான கிஷோர் குணால், அயோத்தி விவகாரத்தை கையாளும் சிறப்பு அதிகாரியாக கடந்த 1990ஆம் ஆண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். காவல் துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்துள்ள இவர் "அயோத்தி ஒரு மறுவிஜயம்' (அஹ்ர்க்ட்ஹ்ஹ தங்ஸ்ண்ள்ண்ற்ங்க்) என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அயோத்தியில் கட்டப்பட்டிருந்த ராமர் கோயிலை இடித்து, அங்கு மசூதியை கட்ட முகலாய மன்னர் பாபர் உத்தரவிட்டார் எனக் கூறுவது முற்றிலும் தவறான கருத்தாகும். கி.பி.1528ஆம் ஆண்டு, பாபரின் ஆட்சிக் காலத்தில் அவரது உத்தரவின்படி, அவாத் மாகாண ஆளுநராக இருந்த மிர் பாக், அயோத்தி ராமர் கோயிலை இடித்துவிட்டு, அங்கு பாபர் மசூதியை கட்டினார் என வரலாற்று அறிஞர்கள் கூறுவதும் கற்பனையான கூற்றாகும்.

ஏனெனில் பாபர் ஒருபோதும் அயோத்திக்கு விஜயம் செய்ததில்லை. உண்மையில் கி.பி. 1660ஆம் ஆண்டு,ஒளரங்கசீப் ஆட்சிக்காலத்தில், அவாத் மாகாண ஆளுநராக ஃபதே கான் பதவி வகித்தபோதுதான் அயோத்தி ராமர் கோயில் இடிக்கப்பட்டது என அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிஷோர் குணால் தனது இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில், சில பழங்கால சம்ஸ்கிருத நூல்கள், கல்வெட்டுகள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திய ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் அயோத்தி நகரம் தொடர்பாக இடம்பெற்றுள்ள தகவல்களை தமது புத்தகத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

கிஷோர் குணாலின் இப்புத்தகத்துக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜி.பி.பட்நாயக் முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர், "அயோத்தி பற்றிய புதிய பார்வையை இந்தப் புத்தகம் நமக்கு அளிக்கிறது; அது, அயோத்தி நகரின் வரலாறு குறித்த பொதுமக்களின் நம்பிக்கைக்கும், பல வரலாற்று அறிஞர்களின் கருத்துகளுக்கும் நேர்மாறாக அமைந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

Read 246 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…