JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

தில்லி - காசிக்கு புல்லட் ட்ரெய்ன்

இந்தியாவின் 2-வது புல்லட் ரயில் சேவை தில்லி - வாராணசி இடையே தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களை புல்லட் ரயில் சேவை மூலம் இணைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டது.

அதன்படி இந்தியாவின் வர்த்தக நகரான மும்பை-ஆமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிதியை டோக்கியோ நிதி நிறுவனம் வழங்குகிறது.

மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயிலைத் தொடர்ந்து மேலும் 7 அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதையடுத்து 2வது புல்லட் ரயில் சேவை தில்லி - வாராணசி இடையே தொடங்கப்படும் என தெரிகிறது.

இதன் மூலம் தற்போது 10 முதல் 14 மணி நேரமாக உள்ள தில்லி - வாராணசி இடையே பயண நேரம் 2 மணி நேரம் 40 நிமிடமாக குறையும் எனக் கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் புல்லட் ரயில் திட்டப் பணிகளை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் விரைந்து செயல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை - ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்பட உள்ள புல்லட் ரயில் சேவை 2023-ம் ஆண்டு துவங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read 159 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…