JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

அந்நிய நேரடி முதலீட்டிற்கு 100 சதவிகித அனுமதி

பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, மருந்துத் தயாரிப்பு, உணவுப் பதப்படுத்துதல் ஆகிய துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதேபோல், ஒலிபரப்பு சாதனங்கள் சேவை, தனியார் பாதுகாவல் அமைப்புகள், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளையும் மத்திய அரசு தளர்த்தியுள்ளது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் 49 சதவீதம் வரை மட்டுமே அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசின் ஒப்புதலுடன் 100 சதவீதம் வரை விமானப் போக்குவரத்துத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது, உள்நாட்டு விமானச் சேவைக்கு மட்டுமே பொருந்தும்.

இதேபோல், பாதுகாப்புத் துறையில் தற்போது 49 சதவீதம் வரை அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இனிமேல், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தும்பட்சத்தில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு வழிவகை செய்யும் அளவில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

இதேபோல், புதிய விதிமுறைகளின்படி, மருந்துப் பொருள்கள் தயாரிப்புத் துறையில், உள்நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் 74 சதவீதம் வரை மத்திய அரசின் முன்அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யலாம். அரசின் அனுமதிபெற்று 100 சதவீதம் வரையும் அன்னிய நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்யலாம்.

இதுதவிர, உணவுப் பதப்படுத்துதல் துறையை ஊக்குவிக்கும் வகையில், மின் வர்த்தக முறை உள்பட உணவுப் பொருள் வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னிய நேரடி முதலீட்டுக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி இருப்பது, இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அன்னிய நேரடி விதிமுறைகள் தளர்த்தப்பட்டன.

Read 203 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…