JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், மழைக்கால கூட்டத்தொடராவது சுமுகமாக நடைபெறுமா என்ற கேள்வி, நாட்டு மக்களிடம் எழுந்து உள்ளது.
 
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் (ஜூலை 18) தொடங்கியது. அவை துவங்கிய முதல் நாளே, மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளித்தது. 
 
இந்நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது, அனைத்து தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
தெலுங்குதேசம், திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெறும் முன்னர் கட்சிகளுக்கிடையேயான விவாதம் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடியை எதிர்த்து கடும் விமர்சனம் செய்ய, மோடி பதிலுரை அளித்தார்.
 
இதனிடையே மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் 126 எம்.பிக்கள் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக ஆளும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.
 
மீதமுள்ள 325 பேர் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால் மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மொத்தம் 451 பேர் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. 
Read 69 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…