JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

கேரளா : எழுத்தாளருக்கு பாஜக மிரட்டல்

கேரளாவில், வலது சாரி அமைப்பினரின் மிரட்டலை அடுத்து, 'மாத்ருபூமி' வார இதழில், தன் நாவல் இடம்பெறுவதை, பிரபல எழுத்தாளர் நிறுத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர், எஸ்.ஹரீஷ், 'மீசை' என்ற நாவலை எழுதியுள்ளார். இந்த நாவல், 'மாத்ருபூமி' வார இதழில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, வலதுசாரி ஹிந்து அமைப்புகளை சேர்ந்தோர், ஹரீஷுக்கு தொடர் மிரட்டல்கள் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாத்ருபூமி இதழில், தன் நாவலை வெளியிடும் முடிவை, ஹரீஷ், திடீரென வாபஸ் பெற்றார்.

இதுதொடர்பாக, 'மாத்ருபூமி' இதழ் ஆசிரியர், கமல்ராம் சஜீவ், 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில், 'கேரள மாநில கலாசார வரலாற்றில், இது ஒரு கறுப்பு தினம்; இனி வரும் நாட்களில் வெளிச்சத்தை பார்க்க முடியாது' என கூறியுள்ளார்.காங்., மூத்த தலைவர், சசி தரூர் கூறுகையில், ''ஹிந்துத்துவ தலிபான்கள் பற்றி, ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தேன். என் எச்சரிக்கை தற்போது நிரூபணமாகி உள்ளது. மலையாள எழுத்தாளர் ஹரீஷின் கைகளை வெட்டுவோம் என, மிரட்டல் விடுத்திருப்பது கண்டனத்துக்குரியது,'' என்றார்.

எழுத்தாளர் ஹரீஷ், கேரள சாஹித்திய அகாடமி விருது பெற்றவர். ஏராளமான சிறுகதைகளை எழுதியுள்ளார். இந்தியாவில் பல தலைமுறைகளுக்கு முந்தைய, தலித்துகளின் வாழ்க்கை முறை, ஹரீஷின், 'மீசை' நாவலில் விவரிக்கப்பட்டுஉள்ளது.

Read 39 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…