JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

லாரி ஸ்டிரைக்  வாபஸ் பெறப்பட்டது

மத்திய அரசு உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து லாரி ஸ்டிரைக் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

பெட்ரோல் , டீசல் விலையை குறைக்க வேண்டும், 3-ம்நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், கடந்த 20ம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தது. இந்நிலையில்அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் குல்தரன்சிங் மற்றும் சங்க நிர்வாகிகளுடன் மத்திய தரை வழி போக்குவரத்து துறை செயலாளர் யுத்வீர் சிங் மலிக் பேச்சுவார்த்தை நடத்தினார். 

பேச்சுவார்த்தையில் சமூக முடிவு ஏற்பட்டதை அடுத்து 8 நாட்களாக நடைபெற்றுவந்தஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாகவும், இன்று இரவு முதல் லாரிகள் ஓட துவங்கும் எனவும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

லாரி உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் குல்தரன்சிங் கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே மாதிரியான சுங்க கட்டணம் வசூலிக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.ஒரே மாதிரியான சுங்க கட்டணம் 6 மாதங்களில் நடைமுறைக்கு வரும். லாரிக்கு 2 டிரைவர் என்பதற்கு பதில் ஒரே டிரைவர் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

3வது நபர் இன்சுரன்ஸ் கட்டண உயர்வு என்பதுஆண்டுக்கு 25 சதவீதத்திலிந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டது.டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.

Read 57 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…