JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

கர்நாடகாவில் கனமழை மற்றும் நிலச்சரிவு

கர்நாடகாவில் கனமழையால் 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு கர்நாடகாவின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு ரூ.200 கோடியை ஒதுக்கி உள்ளது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் குடகு மிக அதிக அளவிலான பாதிப்புக்களை சந்தித்துள்ளது. 

குடகு மாவட்டத்திற்கு செல்லும் சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், குடுகு மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. குடகு - குஷல்நகர் இடையேயான சாலை நிலச்சரிவால் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.

குடகு மாவட்டத்தில் தொடர் கனமழையால் மண்மேடான பகுதியில் அமைந்துள்ள இரண்டு அடுக்கு மாடி வீடு ஒன்று, நிலச்சரிவால் சரிந்து பள்ளத்திற்கு இறங்கி வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் காப்பாற்றும் காட்சிகளும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Read 68 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…