JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

குஜராத்  : கிர் காட்டுப்பகுதியில் 11 சிங்கங்கள் இறந்த நிலையில் கண்டெடுப்பு
குஜராத் மாநிலம் கிர் காடுகளின் கிழக்குப்பகுதியில் கடந்த சில தினங்களில் 11 சிங்கங்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
சிங்கங்கள் இறப்பு குறித்து கிர் காட்டின் வன அதிகாரி ஹிதேஷ் வம்ஜா கூறுகையில், நுரையீரல் தொற்று நோய் காரணமாக பெரும்பாலான சிங்கங்கள் இறந்துள்ளன. சில சிங்கங்களில் தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் கிருமி மற்ற விலங்குகளுக்கும் பரவியதால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 
 
காற்றினால் பரவும் தொற்று கிருமியானது மற்ற சிங்கங்களுக்கும் பரவாமல் இருப்பதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிங்கங்களுக்கு நோய்கிருமிக்கு எதிராக போராடக்கூடிய எதிர்ப்பு சக்தியை கூட்டும் தடுப்பூசியை அதன் உடலினுள் வனத்துறை அதிகாரிகள் செலுத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தார். 
 
இந்நிலையில் வனத்துறை துணை பாதுகாவலர் வி. எம். சவுத்ரி கூறுகையில், இறந்த சிங்கங்களின் உள்ளுறுப்பு பகுதிகளை சேகரித்து ஆய்வுக்காக ஜூனாகாத் கால்நடை மருத்துவமனைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
 
ஆய்வின் முடியில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமியால் சிங்கங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது எங்களுக்கு தெரிய வந்தது. மேலும், சிங்கங்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் எனக் கூறினார். இதனிடையே சிங்கங்கள் திடீரென உயிரிழந்தது குறித்து விசாரணையை மேற்கொள்ள குஜராத் மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

 

Read 72 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…