JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

உலகிலேயே மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம் - துவக்கினார் மோடி

உலகிலேயே மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக கருதப்படும், 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார். ஏழை, எளிய மக்கள் கடனாளியாவதை தடுக்கும் வகையிலும், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யும் வகையிலும், இந்த திட்டம் அமைந்துள்ளது.

ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் இந்த திட்டத்தால், 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த, 50 கோடி பேர் பயனடைவர். ஏழை, எளிய மக்களுக்கு, தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையில், 'ஆயுஷ்மான் பாரத்' எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும், 10.71 கோடி குடும்பங்களைச் சேர்ந்த, 50 கோடி பேருக்கு, இலவச மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்கும். ஏழை, எளிய மக்கள், சிகிச்சைக்காக பணம் செலவிட முடியாமல், கடனாளியாவதை தடுக்கும் வகையில், இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேருவதற்காக யாரும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

சமூக, பொருளாதார மற்றும் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பின் அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தஉறுப்பினர்கள் சிகிச்சை பெறலாம். இதனால், அரசுக்கு, ஆண்டுக்கு, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்; இது, உலகின் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாகக் கருதப்படுகிறது. இதற்காக மாநில அரசுகளுடன், மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

Read 64 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…