JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

டில்லி : நட்சத்திர ஹோட்டலில் தீ விபத்து - 17 பேர் பலி

டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் உயிர் இழந்தனர். பலர் மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பினர். தற்போது தீ கட்டுக்குள் வந்தது. டில்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் ஓட்டல் உள்ளது. இங்கு 150 க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், 28 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த சம்பவத்தில், தூங்கி கொண்டிருந்த, பெண்கள், குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர். தீயைணப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர் காலை 8 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

35 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் 3 பேரை காணவில்லை என போலீசார் கூறியுள்ளனர். தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தி: டில்லியின் கரோல் பாக் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர் இழப்பு ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது. உறவினர்களை இழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம்பெற வாழ்த்துகிறேன்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

தீவிபத்து ஏற்பட்ட ஓட்டலை, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனக்கூறினார். இந்த தீவிபத்து காரணமாக, டில்லியில், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்து நிறைவு பெறுவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அரசு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

 

Read 65 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…