JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

தென்மேற்கு பருவமழை தொடங்கியது

தென்மேற்கு பருவமழை, 2 தினங்கள் முன்னதாகவே அந்தமான் நிகோபார் தீவுகளில் தொடங்கி விட்டதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

ஆய்வு மைய துணை இயக்குனர் பாஸ்கரன் கூறுகையில், ''அந்தமான் பகுதியில் 19-ந்தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி 2 நாட்களுக்கு முன்னதாகவே, தெற்கு அந்தமான் கடல்பகுதி, தெற்கு வங்கக்கடலில் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது.

அங்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேகக்கூட்டங்கள் உருவாகியுள்ளன. அதன் தாக்கத்தால் மழையும் பெய்து வருகிறது. தெற்கு இந்திய கடல் பகுதியில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சியை நோக்கி காற்று வந்து கொண்டிருக்கிறது.

இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து சில நாட்களில் தெற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகளை நோக்கி நகர்ந்து செல்லும்.

ஏற்கனவே அறிவித்துள்ள அரபிக்கடல் வழியாக சென்று கேரளாவில் ஜூன் 6-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது,'' என்றார்.

Read 161 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…