JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

இந்திய கடற்பகுதியில் 1.90 லட்சம் கோடி கனஅடி மீத்தேன் எரிவாயு கண்டுபிடிப்பு

இந்திய கடற்பகுதியில், 1.90 லட்சம் கோடி கன அடி அளவுக்கு மீத்தேன் எரிவாயு இருப்பதை சென்னை, ஐ.ஐ.டி., கண்டுபிடித்துள்ளது. இது தற்போது இந்தியாவில் உள்ள மீத்தேன் வாயுவின் அளவை விட மூன்று மடங்கு அதிகம்.

கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றங்கரை பகுதியில், அதிக அளவுக்கு மீத்தேன் இருப்பதாக, மத்திய புவி அறிவியல் துறை ஏற்கனவே கண்டறிந்துள்ளது. அந்த இடங்களில், மீத்தேன் வாயுவை எடுப்பதில் சிக்கல் உள்ளது.

இந்நிலையில், சென்னை, ஐ.ஐ.டி.,யின் கடலியல் இன்ஜினியரிங் மாணவர்கள், பவன் குப்தா, விஷ்ணு மற்றும் பெட்ரோலியம் இன்ஜினியரிங் துறை பேராசிரியர், ஜிதேந்திர சங்வய் ஆகியோரது குழு, இந்திய கடற்பகுதிகளில், பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வில் இந்தியாவின் பொருளாதார ரீதியான கடல் எல்லைக்குள், ஆழ் கடலில் வாயு படிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது. இந்த படிமங்களை அளவிட்டதில், 1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன், அவற்றில் எடுக்க முடியும் என, ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இது, தற்போது, இந்தியாவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள, மீத்தேன் அளவை விட, மூன்று மடங்கு அதிகம் என, சென்னை, ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.

வெப்ப அழுத்தம், கடலுக்கடியில் படிமங்களின் மீது அழுத்தம் கொடுப்பது, ரசாயனத்தை புகுத்தி எடுப்பது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் பாலிமர் பயன்படுத்தியும், மீத்தேன் வாயுவை எடுக்கலாம் என, ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

Read 66 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…