JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

ஜி.எஸ்.டி., இரண்டாம் ஆண்டு நிறைவு

சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, இதை பெரிய அளவில் கொண்டாட, மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி, டில்லியில் உள்ள, அம்பேத்கர் பவனில் நடக்க உள்ளது. இந்த நிறைவு நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.மேலும், இந்நிகழ்ச்சியில், மத்திய - மாநில வரித்துறை அலுவலகங்களைச் சேர்ந்த உயரதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

முக்கிய நிகழ்வாக, இரண்டு ஆண்டுகளில், ஜி.எஸ்.டி.,யின் பயணம் குறித்தும், எதிர்காலதிட்டங்கள் குறித்தும் விளக்கபட உள்ளன. இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, ஜி.எஸ்.டி., வரி திட்டம் அமல்படுத்தபட்டது. இந்த 2 ஆண்டுகளில், இத்திட்டத்தின் பலன்கள் குறித்து, பெரும்பாலா னோர் அறிந்தனர். அதேபோல், மாற்றங்கள் கோரும் கருத்துகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதையடுத்து, அவசியமான மாற்றங்கள் அடுத்தடுத்து செய்யப்பட்டு வந்தன. புதிய அறிவிப்புகள் இன்னும் பல துறைகளிலிருந்து, பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன.அவை அனைத்துமே, கவுன்சிலின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படுகின்றன. அதன்அடிப்படையில், புதிய அறிவிப்பு கள் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கு, 'இ- - வே' பில் நடைமுறையை கொண்டு வந்தது உள்ளிட்ட காரணங்களால், வரி ஏய்ப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு உள்ளன.கடந்த இரண்டு ஆண்டு களில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு மேலும் எளிமை யானதாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

500க்கும் மேற்பட்ட பொருட்களுக் கான வரி விதிப்பை குறைத்து, பல்லாயிரக் கணக் கானோரை பயன் பெற வைத்துள்ளது. 'ஒரு நாடு; ஒரு வரி' என, நாட்டை ஒன்று படுத்துவதில், ஜி.எஸ்.டி.,யின் பங்கு மிகவும் மகத்தானது.இவ்வாறு, அவர் கூறினார். அறிமுகம் ஜூலை 1ல் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், புதியவரி தாக்கல் முறைக்கான,முன்னோட்டம் அறிமுகம் செய்யபட உள்ளது. நடப்பில் உள்ள, ஜி.எஸ்.டி.ஆர்., 3பி, ஜி.எஸ்.டி.ஆர்., 1 ஆகிய வற்றை தாக்கல் செய்வதற்கு மாற்றாக, இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read 138 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…