JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

படேல் சிலையில் நீர் கசிவு

உலகின் மிகப் பெரிய சிலை என்ற பெருமையுடனும், ஒற்றுமையின் அடையாளமாகவும் குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது சர்தார் வல்லபாய் படேல் சிலை.

182 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலையை பிரதமர் மோடி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைத்தார். இந்த சிலையின் மையப்பகுதியில் பார்வையாளர்கள் கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தபடியே நர்மதை நதியையும், குஜராத்தின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும். இந்நிலையில் குஜராத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழைநீர், சிலையில் உள்ள பார்வையாளர்கள் பகுதியில் கசிந்து, உட்புறம் மழைநீர் தேங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

சிலையின் உள்ளே மழைநீர் ஒழுகும் காட்சியை சுற்றுலா பயணி ஒருவர் தனது மொபைல்போனில் படம் பிடித்து, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அது குறித்து சிலையின் சிஇஓ ஐ.கே.படேலிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் பார்வையாளர் மாடத்தை பார்வையிட்டார். பிறகு சிலை ஒழுகுவதாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த அவர், மழை போன்ற காலநிலைகளை சுற்றுலா பயணிகள் ரசித்து மகிழ்வதற்காக இந்த வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆனால் பார்வையாளர் கூடத்தில் மட்டுமல்ல, சிலையில் மேற்பரப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சிலைக்குள் வந்துள்ளதாக சுற்றுலா பயணிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

Read 126 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…